விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது: ராஜகுமாரன் ராக்ஸ்!

விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது: ராஜகுமாரன் ராக்ஸ்!

Share it if you like it

நடிகர் விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது என்று டைரக்டர் ராஜகுமாரன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

1990-ம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம். இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1999-ம் ஆண்டு வெளியான சேது படம்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் பிறகு, ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர், பல வெற்றிப் படங்களையும் கொடுத்திருக்கிறார். தில், தூள், ஜெமினி, சாமி போன்ற படங்கள் கமர்ஷியலாக பெரும் வசூலை குவித்தது என்றால், சேது, பிதாமகன், காசி, ஐ, அந்நியன் உள்ளிட்ட படங்கள் விக்ரமின் நடிப்புத் திறமைக்கு சாட்சியாக அமைந்தன. தமிழ்த் திரைப்படத்துறையில் 7 ஃபிலிம் பேர் விருதுகளை பெற்றிருக்கும் நடிகர் விக்ரம், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், தமிழக விருதையும் பெற்றிருக்கிறார்.

இது தவிர, இவருக்கு இத்தாலியிலுள்ள மிலான் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. மேலும், ஐக்கிய நாடுகள் குடிசார் அமைப்பின் தூதராகவும் இருக்கிறார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் கென்னடி. இவரது தந்தை ஜான் விக்டர் மாஜி ராணுவ அதிகாரி. தாய் ராஜேஸ்வரி சப் கலெக்டராக இருந்தவர். விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு சமீபத்தில்தான் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. மகன் துருவ் விக்ரம், தமிழ்த்திரைப்படத் துறையில் நடிகராக இருக்கிறார்.

இந்த நிலையில்தான், 2001-ம் ஆண்டு விக்ரமை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற படத்தை இயக்கினார் ராஜகுமாரன். இப்படத்தில் தேவயாணி, சரத்குமார், குஷ்பு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்தான், நடிகர் விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது என்று கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து ராஜகுமாரன் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், “கையையும் காலையும் உடைத்துக் கொண்டு, கண் தெரியாததுபோல நடிப்பதெல்லாம் நடிப்பே கிடையாது. விக்ரமுக்கு அப்படித்தான் நடிக்கத் தெரியும். அல்லது கமல் மாதிரியோ, ரஜினி மாதிரியோ நடிப்பார். ஆனால், ஸ்கிரீனுக்கு முன்னால் கட் சொல்லும் வரை நடிப்பவர்தான் நல்ல நடிகர். விக்ரமுக்கு அப்படி நடிக்கத் தெரியாது” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

ராஜகுமாரனும் ஒரு நல்ல இயக்குனர் மற்றும் கதாசிரியர்தான். நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், சிவராம், திருமதி தமிழ் போன்ற படங்களை இயக்கிவர்தான். நீ வருவாய் என படத்துக்கு சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றவர். அதேபோல, காதலுடன் படத்துக்கான சிறந்த குடும்ப திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றவர். மேலும், பல்வேறு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், நடிகர் விக்ரமுக்கு நடிக்கத் தெரியாது என்று கூறியிருப்பதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் விக்ரம் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ராஜகுமாரனை கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.

https://twitter.com/MrElani/status/1504791253548146692


Share it if you like it