நலமுடன் திரும்புவாரா ‘ஆதித்ய கரிகாலன்’?

நலமுடன் திரும்புவாரா ‘ஆதித்ய கரிகாலன்’?

Share it if you like it

பிரபல நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கும் சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேது, சாமி, அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் விக்ரம். இவர், தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், தற்பொழுது பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் ‘ஆதித்ய கரிகாலனாக’ நடித்து உள்ளார். இதன் டீசர் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விக்ரமிற்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து, அவர் மைலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இத்தகவல், வெளியாகியதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு பாலிமர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it