வைரலாகும் காணொளி: கணவரை தோற்கடித்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்த நயன்தாரா!

வைரலாகும் காணொளி: கணவரை தோற்கடித்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்த நயன்தாரா!

Share it if you like it

விளையாட்டில் தனது கணவரை தோற்கடித்து துள்ளி குதித்த நயனின் காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர், பிரபல திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனை அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின், திருமணம் இந்தியாவையே திரும்பி பார்க்கும் வண்ணம் அமைந்து இருக்கிறது. தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, சரத்குமார், சிவகார்த்திகேயன், அஜித் மனைவி ஷாலினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் காதல் தம்பதியை வாழ்த்தினர்.

தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். அந்தவகையில், கடந்த மாதம் திருப்பதி சென்றிருந்த இருவரும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தனர். இதன்பிறகு, ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துகொள்வதாக அறிவித்து, பத்திரிகை அச்சடித்து திரையுலகினர் உட்பட முக்கிய புள்ளிகளுக்கு கொடுத்தனர். இதையடுத்து, அவர்களின் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் விசேஷ கண்ணாடி மாளிகை போன்று திருமண அரங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது கணவரை விளையாட்டில் தோல்வியடைய செய்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it