அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே முரண்பாடா?: செங்கோட்டையன் விளக்கம்!

அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே முரண்பாடா?: செங்கோட்டையன் விளக்கம்!

Share it if you like it

அதிமுக – பாஜக இடையே முரண்பாடு இல்லை, என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் கூறும் போது இவ்வாறு கூறினார் ; எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல அ.தி.மு.க.வை பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே முரண்பாடுகள் இல்லை. நேர சூழல் காரணமாக, பிரதமர்- பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை. பிரதமரை எங்கு எப்போது சந்திக்க வேண்டுமோ, அப்போது பொதுச்செயலாளர் பழனிசாமி சந்திப்பார் என கூறினார்


Share it if you like it