ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்கு வாழும் அப்பாவி இஸ்லாமிய மக்கள், ஷரியத் சட்டத்திற்கு பயந்து அண்டை நாடுகளில் அடைக்கலம் கேட்டு ஓடுவதை உலக நாடுகளே இன்று வரை பார்த்தது வருகிறது. தனக்கு பிடிக்காத மனிதர்கள், இயக்கங்கள், தூதரகங்களின் மீது மனித வெடிகுண்டுகளை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் ஹக்கானி குழு என்பதை அமெரிக்கா முதற்கொண்டு பல நாடுகள் நன்கு அறியும்.

இந்நிலையில் ஹக்கானி குடும்பத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவனான அனஸ் ஹக்கானி முகமது கஜினி நினைவிடத்திற்கு சென்று விட்டு அவரின் புகழையும், சோம்நாத் கோவிலை கஜினி அழித்தது பற்றியும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தான்.

இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மேஜர் மதன்குமார் ஆப்கான் பயங்கரவாதியின் கருத்திற்கு இவ்வாறு கூறியுள்ளார்.
நாங்க சோம்நாத்தில் பிணத்தை எரிப்போம் புதைக்க மாட்டோம் தேர்வு உங்களுடையது என்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார் மரண பதிலடியை கொடுத்து உள்ளார்.