பள்ளிகளில் ஆண், பெண், பாலின வேறுபாட்டை உருவாக்கும் விதமாக பேசிய சபரிமாலா.
பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும், திகழ்ந்து வரும் ஆசியர்கள் மத்தியில் பிளவு ஏற்படும் வகையில் ஆண், பெண், என்கிற பாலின வேறுபாட்டை உருவாக்கியுள்ளார் புதிய போராளி சபரிமாலா. மாணவிகளை, மாணவர்கள் பார்க்காத வண்ணம் பள்ளி அறையின் நடுவில் திரை அமைத்து, இனிமேல் இப்படி தான் பாடம் நடத்த வேண்டும் என்று ஆப்கான் நாட்டை சேர்ந்த தாலிபான் பயங்கரவாதிகள் அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், சமீபத்தில் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருந்தனர்.
இந்த காட்டுமிராண்டி தனமான முடிவிற்கு உலக நாடுகள் முதல் பல்வேறு சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், உட்பட பலர் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் தான் புதிய போராளி சபரிமாலா அவர்கள் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பள்ளி மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் பார்க்காமலேயே பாடம் நடத்தும் வகையில் சிறிய அறையுடன் கூடிய வசதி இருக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை தமிழக மக்கள் மனதில் இவர் திணிக்க முயல்வது போல் இந்த காணொளி அமைந்து உள்ளது.
பள்ளி மாணவிகள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்படும் வகையிலும், ஆண் ஆசிரியர்கள் குறித்து ஒரு தவறான எண்ணத்தை இவர் ஏற்படுத்த முயல்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.