அரசாங்கம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்.
அனைத்து மாணவர்களும் மருத்துவராக கூடிய வாய்ப்பினை நீட் தேர்வு ஏற்படுத்தி தருகிறது. நீட் தேர்வினால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று பல சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மற்றும் முன்னாள் துணை வேந்தர்கள் உட்பட பலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது நிதர்சனம்.
மருத்துவ கல்லூரி என்னும் போர்வையில் மாணவர்களிடம் பணம் பறிக்கும் மாபியாக்கள் மற்றும் தன்னிடம் உள்ள பணத்தின் மூலம் தேர்வு எழுதாமல் பாஸ் ஆக துடிக்கும் மாணவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் கடிவாளமாக நீட் தேர்வு உள்ளதால் மருத்துவ மாஃபியாக்கள் அரசியல்வாதிகளை தூண்டி விடுவதாக பரவலான குற்றச்சாட்டு இன்று வரை இருந்து வருகிறது.
இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகம் தான் நீட் தேர்வில் விலகு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் India Ahead Tamil ஊடகத்திற்கு நீதிபதி ஏ.கே. ராஜன் பேட்டியளிக்கும் பொழுது. அவ்ஊடக பெண் நெறியாளர் எழுப்பிய பல கேள்விகளுக்கு தொடர்ந்து மழுப்பலான பதிலை நீதிபதி அளித்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
He burried belief of people what they has abt judiciary