ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கடத்த புதன்கிழமை தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய நியூ ஜெனரேஷன் ஆகாஷ்-என்ஜி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், டிஆர்டிஓ-வின் இதர ஆய்வகங்களோடு இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளது.
ஆகாஷ்-என்ஜி ஏவுகணை இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டவுடன், அதன் செயல்பாடுகள் வலிமையை அதிகரிக்கும்.
டிஆர்டிஓ, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், இந்திய விமானப்படை மற்றும் தொழில்துறையை வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.இதனை தொடர்ந்து சமூக வலை தளகளிலும் மக்களின் பாராட்டுக்களை பெற்றுவருகிறது.