இன்று கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, வீரபாண்டி, சின்ன தடாகம், மடத்தூர், பாப்பநாயக்கன் பாளையம், தாளியூர், பன்னிமடை, கணுவாய், காளப்பநாயக்கன் பாளையம், சோமையம் பாளையம், கஸ்தூரிநாயக்கன் பாளையம், அண்ணா நகர், இடையர் பாளையம், TVS நகர், KNG புதூர் பிரிவு பகுதிகளில், இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பேரன்பை வெளிப்படுத்தும் வண்ணம் திரண்டிருந்த பொதுமக்கள் ஆதரவுடன், தாமரை சின்னத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்குகள் சேகரித்தார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில்,
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும், ஜூன் 4ஆம் தேதியிலிருந்து 500 நாட்களில், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியின், அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட, குடிதண்ணீர்ப் பிரச்சினை, உட்கட்டமைப்பு, விசைத்தறி, விவசாயப் பிரச்சினைகள் என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆதரவுடன், தமிழக பாஜக
சார்பாக வழங்கப்பட்டுள்ள நூறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, கோவையை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று உறுதி அளிக்கிறேன்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கும்போது, கோயம்புத்தூர் மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளும், நகரத்தின் அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்று வளர்ச்சி பெற, மத்திய அரசின் திட்டம் முழுமையாக மக்களைச் சென்று சேர்வதை கண்காணிக்க, கேள்வி கேட்க, நமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய, அவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில், வளர்ச்சி பெற்ற இந்தியாவில் வசிக்க, உங்கள் அன்புத் தம்பி, உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணாமலை ஆகிய எனக்கு, கோவை பாராளுமன்றத் தொகுதியில், கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.