அமெரிக்க ‘ஆயுத’ ட்ரோன் பேச்சுவார்த்தை ‘சக்சஸ்’!

அமெரிக்க ‘ஆயுத’ ட்ரோன் பேச்சுவார்த்தை ‘சக்சஸ்’!

Share it if you like it

அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் ஏந்திச் செல்லும் ‘எம்க்யூ9பி பிரிடேடர் ட்ரோன்கள்’ நமது ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நமது ராணவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, எல்லைப் பகுதியில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது நமது ராணுவம். அதேபோல, இந்தியப் பெருங்கடலில் சீன கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. எனவே, கண்காணிப்பு மட்டுமின்றி, தாக்குதல் நடத்தும் திறனும் கொண்ட ஆளில்லா விமானங்களை வாங்க மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவிடம் இருந்து ‘எம்க்யூ9பி பிரிடேடர்’ என்ற ட்ரோனை வாங்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவின் இக்கோரிக்கையை அமெரிக்க ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் அடாமிக்ஸ் நிராகரித்து விட்டதாகக் கூறப்பட்டது. அதேசமயம், இத்தகவலை அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். ”எம்க்யூ9பி பிரிடேடர் ட்ரோன்களை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா நடத்தி வரும் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது” என்று ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி டாக்டர் விவேக் லல் தெரிவித்திருக்கிறார். எனவே, ராணுவம், விமானம் மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளுக்கும் தலா 10 ட்ரோன்கள் வீதம் மொத்தம் 30 ட்ரோன்களை 23,700 கோடி ரூபாய்க்கு வாங்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது.

இந்த ட்ரோன்கள் ஆயுதங்களை சுமந்து செல்வதோடு, நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை. தவிர, இந்த ட்ரோன்கள் தரை, வான், கடற்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு, நீர்மூழ்கிக் கப்பல் உட்பட மூன்று நிலைகளிலும் தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்த ட்ரோன்கள் மட்டும் இந்தியாவின் கைக்கு வந்து விட்டால், சீனாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்.


Share it if you like it