‘நாசாவின் நிலவு’… தலைமை பொறுப்பில் இந்தியர்!

‘நாசாவின் நிலவு’… தலைமை பொறுப்பில் இந்தியர்!

Share it if you like it

நாசாவின் நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன்ஜினீயர் அமித் ஷத்ரியா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தை நாசா துவக்கி இருக்கிறது. இத்திட்டத்தின் தலைமை பொறுப்பில்தான், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘ரோபாட்டிக்ஸ்’ இன்ஜினீயர் அமித் ஷத்ரியா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டம், நிலவுக்கான பயணங்களை மேற்கொள்ளவும், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரையிறக்கவும் நாசாவை தயார்படுத்த உதவும்.

இத்திட்டத்தின் தலைமைப் பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாப்ட்வேர் மற்றும் ரோபாட்டிக்ஸ் இன்ஜினீயர் அமித் ஷத்ரியா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது தலைமையில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறது. சமீபக காலமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் பல்வேறு நாடுகளின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, லண்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றிருக்கிறார். அதேபோல, அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it