Share it if you like it
இந்தியாவில் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு சுதந்திரம் என்பதில் இருந்து பாதி சுதந்திரம் என்ற நிலைக்கு இந்தியா வந்துவிட்டதாக அமெரிக்க என்.ஜி.ஓ வான ‘ப்ரீடம் ஹவுஸ்’ வெளியிட்டிருந்த கருத்திற்கு இந்தியா சார்பில் கடுமையான கண்டனங்கள் தெறிவிக்கப்பட்டு வருகின்றது இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ”இந்தியாவில் ஜனநாயக கொள்கைகள் வலிமையாக பின்பற்றப்படுகின்றன. தங்கள் நாட்டில் ஜனநாயகத்தை வலிமையாக்காதவர்களிடம், சான்றிதழ் பெற வேண்டிய அவசியம், இந்தியாவுக்கு இல்லை,” என்றார்.
Share it if you like it