அம்ரித் சரோவர் திட்டம்: 40,000 நீர்நிலைகள் சீரமைப்பு!

அம்ரித் சரோவர் திட்டம்: 40,000 நீர்நிலைகள் சீரமைப்பு!

Share it if you like it

அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ், நாடு முழுதும் 40,000 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நம் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். மேலும், இப்பெருவிழாவை நாட்டு மக்கள் வீடுகள்தோறும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதேபோல, 75-வது சுதந்திர அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாடு முழுவதுமுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு புனரமைக்கப்படும் என்று கடந்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இத்திட்டத்துக்கு ‘அம்ரித் சரோவர்’ என்று பெயரிடப்பட்டது.

இந்த நிலையில், இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “இத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் 50,000 நீர்நிலைகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 11 மாதங்களில் மட்டும் 80 சதவீத இலக்கு எட்டப்பட்டு விட்டது. இதுவரை 40,000 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கின்றன. இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

இத்திட்டத்தை செயல்படுத்த உதவுவதற்காக 54,088 பயனாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நீர்நிலைகளை சம்பந்தப்பட்ட பகுதியில் அமைக்க முடியுமா? இத்திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்பது போன்ற பணிகளுக்கு, இந்த பயனாளர் அமைப்பு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகள், மூத்த குடிமக்கள், பத்ம விருது பெற்றவர்கள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தை செயல்படுத்த மிகவும் உதவியாக இருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it