ஹிந்து மதத்தை பாதுகாக்க ஆந்திராவில் 3,000 கோயில்!

ஹிந்து மதத்தை பாதுகாக்க ஆந்திராவில் 3,000 கோயில்!

Share it if you like it

ஆந்திர மாநிலத்தில் ஹிந்து மத நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில், 3,000 கோயில்கள் கட்டும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மத மாற்றம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதன் காரணமாக சில மாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக ஆகிவிட்ட அவலமும் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மொகலாயர்கள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் இருந்த ஹிந்து கோயில்களை எல்லாம் இடித்துவிட்டு, மசூதிகளாகவும், சர்ச்களாகவும் மாற்றி விட்டதுதான். மேலும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மைனாரிட்டி என்கிற சலுகையைப் பயன்படுத்தி, ஏராளமான மசூதிகளையும், சர்ச்களையும் கட்டி வருகின்றனர்.

எனவே, ஹிந்துக்களை பாதுகாக்கவும், கோயில்களை புனரமைக்கவும் பா.ஜ.க., இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அயோத்தியில் மொகலாயர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படிருந்த ராமர் கோயில் மீட்கப்பட்டு தற்போது புதிதாக கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல, காசி விஸ்வநாதர் ஆலயம் அருகிலுள்ள ஞானவாபி மசூதி, மதுராவிலுள்ள மசூதி ஆகியவையும் ஹிந்து கோயில்கள்தான் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான், ஹிந்து மதத்தை பாதுகாக்க ஆந்திராவில் 3,000 கோயில்களை கட்ட திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருக்கிறது.

இதுகுறித்து ஆந்திர துணை முதலமைச்சரும், அறநிலையத்துறை அமைச்சருமான கோட்டு சத்தியநாராயணா கூறுகையில், “ஆந்திர மாநிலத்தில் ஹிந்து மதத்தை பாதுகாக்கவும், ஹிந்து மதத்தைப் பரப்ப பிரசாரம் செய்யும் வகையிலும், நலிந்த பிரிவினர் வசிக்கும் பகுதிகளில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில், 3,000 கோயில்கள் கட்டும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இக்கோயில்கள் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை தலா 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது.

இவற்றில் 1,330 கோயில்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. மேலும் 1,465 கோயில்களை கட்டுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தவிர, சில சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில், மேலும் 200 கோயில்கள் கட்டப்படும். மீதமுள்ள கோயில்களின் கட்டுமானப் பணிகள் மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும். அறநிலையத் துறையின் கீழ் 978 கோயில்கள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it