வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகா புண்ணிய ஷேத்ரா கோயில்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகா புண்ணிய ஷேத்ரா கோயில்!

Share it if you like it

கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மகா புண்ணிய ஷேத்ரா கோயில் அடித்துச் செல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கடுமையாக பெய்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, அஸ்ஸாம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேற்கண்ட மாநிலங்களில் பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், கோதாவரி ஆறு பாயும் 6 மாவட்டங்களிலுள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. இக்கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், அரசால் மீட்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருந்த மகா புண்ணிய ஷேத்திரம் கோயில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. அதாவது, புருஷோத்தப்பட்டினத்தில் கோதாவரி ஆற்றின் கரையோரம் மகா புண்ணிய ஷேத்திரம் கோயில் அமைந்திருக்கிறது. கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், இக்கோயில் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கோயில் சரிந்து ஆற்றுக்குள் விழுந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதை அக்கிருந்த பக்தர்கள் சிலர், தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்த காணொளிதான் வைரலாகி ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it