ராமநாதபுரம் ; கடலாடி அருகே அங்கன்வாடி குழந்தைகளுக்கு தந்த முட்டைகளில் பெரும்பாலும் அழுகியும், கோழிக்குஞ்சுகள் வரும் நிலையில் முட்டைகள் இருந்ததாக அண்மையில் புதியத் தலைமுறை செய்தி வெளியிட்டு இருந்தது. குழந்தைகளின் நலனை கருதி தரமான முட்டைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்நிலையில் திருப்பூரில் அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததால் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏழை குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றி துளியும் கவலைப்பாடமல் அழுகிய முட்டைகளை வழங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சத்துணவில் அழுகிய முட்டைகள், வருடம் ஒரு முறை வாங்கும் ஸ்வீட் பாக்ஸ்க்கு 100கோடி கம்பெனி தேவை என்று டென்டர் கன்டிசன் போட தெரிஞ்ச அரசுக்கு ஏழை குழந்தைகள் உணவு சரியாக வாங்க தெரியவில்லை