காங்கிரஸ் கட்சி – சீனா, பாக்., இழந்த பகுதிகளை துளியும் ”ரத்தம்” சிந்தாமல் இந்தியா மீட்கும் – அனிருத் குமார் மிஸ்ரா கணிப்பு..!

காங்கிரஸ் கட்சி – சீனா, பாக்., இழந்த பகுதிகளை துளியும் ”ரத்தம்” சிந்தாமல் இந்தியா மீட்கும் – அனிருத் குமார் மிஸ்ரா கணிப்பு..!

Share it if you like it

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாரத நாடு இழந்த உரிமைகள், நிலப்பகுதிகள், ஏராளம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. சீனா, பாகிஸ்தான், பெயரை கேட்டாலே அப்பொழுது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உட்பட அதன் கூட்டணி கட்சிகள் நடுங்கியது என்பது நிதர்சனம்.

பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து மெல்ல மெல்ல இந்தியாவின் வளர்ச்சி வேகமாகவும், சீனா மற்றும் அதன் அடிமை நாடான பாகிஸ்தானிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. மோடி அரசை காங்கிரஸ் ஆட்சி போல தான் இருக்கும் என்று நினைத்த சீனா ”டோக்லோம்” (பூட்டான்) பகுதியில் வாலாட்ட துவங்கியது.

இதனை அடுத்து 70 நாட்களுக்கும் மேல் இந்தியா, சீனா, இடையில் கடும் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ”டோக்லோம்” பகுதிக்கு இந்திய ராணுவம் செல்வதற்கு 7 மணி நேரம் ஆனது. தற்பொழுது 40 நிமிடங்களிலேயே அப்பகுதிக்கு இந்திய ராணுவம் செல்லும் வகையில் மோடி அரசு  தரமான சாலைகள் அமைத்துள்ளது.

அதே போன்று ஜம்மூ- காஷமீர் பகுதியில் இருந்து ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு முன்பு 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். ஆனால் தற்பொழுது இந்திய ராணுவ வீரர்கள் வெறும் சில மணித்துளிகளில் அப்பகுதிக்கு செல்லும் வகையில் தரமான வழியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வளவு மெத்தனமாக உள்ளது என்பதற்கு இது வெறும் சிறு சான்றே.

இந்நிலையில் பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இழந்த பகுதிகளை இந்தியா மீட்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

  • செப்டம்பர் 2030- க்குள் கில்கிட், பால்டிஸ்தான், பகுதி உட்பட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியா மீண்டும் பெறும்.
  • இந்தியா 2032 -க்குள் அக்சாய் சின் (1962 இல் இழந்தது)பகுதியை  மீண்டும் பெறும் என்று கணித்துள்ளார் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் குமார் மிஸ்ரா முன்பு கணித்தவை..

  • இரண்டாவது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும். மீண்டும்  பிரதமராக மோடி தொடர்வார்..
  • கோவிட் மூன்றாவது அலையை இந்தியா பார்க்காது. இந்தியாவின் தற்போதைய தொற்று நோயின் விளைவு ஜூலை வரை நீடிக்கும். வரும் ஜூலை, நவம்பரில், இருந்து இந்தியா ஆரோக்கியமான, நிலைக்கு மாறும் என்று கணித்துள்ளார்.


Share it if you like it