தி.மு.க. எம்.எல்.ஏ.விற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீண்டும் தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், ஏப்ரல்- 14 -ஆம் தேதி தனது வாட்ச் பில்லை பொதுமக்களிடம் காட்டுகிறேன். அதேவேளையில், தி.மு.க.வின் ஊழல் பட்டியல்களை ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், திராவிட தினமான நேற்றைய தினம் ( “ஏப்ரல் பூல்” ) பா.ஜ.க. தலைவர் தனது வாட்ச் பில்லை காண்பிக்க வேண்டும் என “ஹேஷ் டேக்” ஒன்றை உருவாக்கி தி.மு.க. ஐடி விங் தலைவர் டி.ஆர்.பி. ராஜா விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு, கழக கண்மணிகளும், தி.மு.க.வின் நிரந்தர கொத்தடிமைகளும் ஒத்து ஊதியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க.வின் ஐடி விங் தலைவருக்கு புரியும் வகையில் தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.
பா.ஜ.க. தலைவரிடம் தொடர்ந்து நோஸ்கட் வாங்கி வரும் டி.ஆர்.பி. ராஜாவிற்கு இது தேவையா என நெட்டிசன்கள் பசுமையாக அவரை வாழ்த்தி வருகின்றனர்.