மத மாற்றத்துக்கு எதிர்ப்பு: ஹிந்துக்கள் போராட்டம்!

மத மாற்றத்துக்கு எதிர்ப்பு: ஹிந்துக்கள் போராட்டம்!

Share it if you like it

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும், மத மாற்றத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துக்கள் வசித்து வந்தாலும், சிந்து மாகாணத்தில் அதிகளவிலான ஹிந்துக்கள் வசித்து வருகிறார்கள். இந்த சூழலில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள், சிறுமிகள், திருமணமான பெண்கள் ஆகியோர் இஸ்லாமியர்களால் கடத்திச் செல்லப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், எந்த நிவாரணமும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும், நீதி கேட்டும், மத மாற்றத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும், கராச்சி பிரஸ் கிளப் மற்றும் சிந்து சட்டசபை முன்பு ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பெண்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதேபோல, மத மாற்றத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரும்படியும் பதாகைகள் ஏந்தி வந்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Share it if you like it