103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் பாட்டியை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருதை அறிவித்தது.. தேசம், சமூகம், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் மக்களை அடையாளம் கண்டு மோடி தலைமையிலான அரசு அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி வருகிறது என்பது நிதர்சனம்..
தங்களுக்கு வேண்டிய பல துறைகளை முந்தைய காங்கிரஸ் அரசிடம் அழுது வாங்கிய தி.மு.க.. பாப்பம்மாள் போன்ற விவசாயி பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்பதை யாரும் மறந்திருக்க முடியாது..
இந்நிலையில் பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..
10 ஆண்டுகளாக நீங்கள் முந்தைய (காங்கிரஸ்) அரசை ஆதரித்தீர்கள்.. ஆனால் இவர்களை போன்றவர்களை அடையாளம் காண முடியவில்லை.. பா.ஜ.க அரசு அவரின் சாதனையை அடையாளம் கண்டு அங்கீகரித்துள்ளது.. ஆனால் வெட்கமின்றி அதனுடைய பலனை பெற விரும்புகிறீர்கள்.. இந்த விருதுக்கு முன்பு அவர் எங்கே இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
All this goodness you couldn’t recognise for 10 years when you were supporting the central govt. It took the @BJP4India govt,which stands for common people to recognise her achievement
Now shamelessly taking credit for it& @udhay did you even know her existence before this award? https://t.co/W45ZeGRiTu— K.Annamalai (@annamalai_k) January 31, 2021
#Padmashri விருது அறிவிக்கப்பட்டிருக்கும் கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் அவர்களை இன்று கோவையில் நேரில் சந்தித்து வாழ்த்தினேன்!
உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி! pic.twitter.com/Hgi82SAoy8
— M.K.Stalin (@mkstalin) January 26, 2021