ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பிரபல அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது, மகன் திருமகன் ஈ.வெ.ரா – 46. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். அந்த வகையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. அதன்படி, 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வேண்டும். அந்தவகையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப். 7 எனவும், வேட்புமனு பரிசீலனை பிப்.8-ம் தேதி நடைபெறும் என்றும், பிப்.10ம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியும் பிரபல தேர்தல் வியூக நிபுணருமான ஆஸ்பயர் சுவாமிநாதன் பரபரப்பு தகவலை கூறியிருக்கிறார். அதாவது, ஈரோட்டில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலையே கூட வேட்பாளராகக் களமிறங்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ் இடையே நிலவும் மோதல் மற்றும் இரட்டை சிலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க அதிக வாய்ப்பு உண்டு. ஆகவே, ஈரோட்டில் பா.ஜ.க. போட்டியிட வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.