அந்த செங்கல் திருடனுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கு: – அண்ணாமலை செம கலாய்!

அந்த செங்கல் திருடனுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கு: – அண்ணாமலை செம கலாய்!

Share it if you like it

தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலாய்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அந்த வகையில், மகளிருக்கு ரூ. 1,000, நீட் தேர்வு ரத்து, பூரண மதுவிலக்கு மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை என இன்னும் பல வாக்குறுதிகளை வழங்கினார். இவற்றில், பெரும்பாலான வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றபடவில்லை.

நீட் தேர்வு ரத்து செய்வது எப்படி? என்ற ரகசியம் எனக்கும், எனது தந்தைக்கு மட்டுமே தெரியும் அதனை நாங்கள் செய்வோம் என்று கூறினார். எனினும், இந்த விடியல் அரசு அதன் ரகசியத்தை இன்றுவரை தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா கடந்த மாதம் அகால மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து, எதிர்வரும் பிப் -27 தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, தி.மு.க. தனது கூட்டணி வேட்பாளரான இ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல, அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு-வை ஆதரித்து பா.ஜ.க. தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தவகையில், நேற்றைய தினம் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பா.ஜ.க. தலைவர் பேசும் போது, அந்த செங்கல் திருடனுக்கு எனக்கும் வித்தியாசம் இருக்கிறது என அமைச்சர் உதயநிதியை கிண்டல் செய்துள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it