பெருநகர சென்னை மாநகராட்சியின் 198-வது வார்டு கவுன்சிலர் தம்மை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டது தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரின், எழுத்தாற்றல், பேச்சாற்றல் மூலம் தமிழகத்தையும் தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநில மக்களிடையே மிகுந்த நன்மதிப்பினை பெற்று இருக்கிறார். இதன்காரணமாக, அனைவரும் விரும்பும் தலைவராக அண்ணாமலை மாறி இருக்கிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை, தேசிய தலைவராக கொண்டு வரும் அளவிற்கு பா.ஜ.க. மேலிடம் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு, உலக தலைவர் மோடியும் ஒப்புதல் அளித்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரம் தெரிவித்து இருக்கின்றன. இதுதவிர, ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வரும் ஒரே கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது. குறிப்பாக, தி.மு.க. குறித்து இன்று அண்ணாமலை என்ன சொல்ல போகிறார் என்று அனைத்து ஊடகங்களும் அவரையே மொய்த்து வருகின்றன.
இப்படியாக, பா.ஜ.க.வின் எழுச்சியும், வளர்ச்சியும் தமிழகத்தில் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தான், பெருநகர சென்னை மாநகராட்சியின் 198-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லியோ சுந்தரம். இவர், பா.ஜ.க.வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தமது ஆதரவாளர்களுடன் சென்று அண்ணாமலை முன்னிலையில் தம்மை அக்கட்சியில் இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வின் சார்பில் 134-வது வார்டில் போட்டியிட்டு உமா ஆனந்தன் வெற்றி பெற்று இருந்தார். அந்த வகையில், தற்போது சென்னையில் பா.ஜ.க.வின் பலம் இரண்டாக உயர்ந்துள்ளது.