தீவிரவாதிக்கு உதவிய முதல்வர்: ஸ்வப்னா சுரேஷ் பகீர் தகவல்!

தீவிரவாதிக்கு உதவிய முதல்வர்: ஸ்வப்னா சுரேஷ் பகீர் தகவல்!

Share it if you like it

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதி கேரளாவில் இருந்து தப்பிக்க முதல்வர் பினராயி விஜயன் உதவியதாக தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் பகீர் தகவலை தெரிவித்து இருக்கிறார்.

எளிமையானவர்கள், நேர்மையானவர்கள், பாட்டாளிகளின் தோழர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள் கம்யூனிஸ்ட்கள். ஆனால், இவர்களது நோக்கம், செயல்பாடு மற்றும் கொள்கைகள் அனைத்தும் நாட்டிற்கு எதிராகவே இன்று வரை இருந்து உள்ளது. இந்தியா சீனா இடையில் போர் மூண்ட சமயத்தில் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் சீனாவிற்கே தங்களது முழு ஆதரவினை தெரிவித்து இருந்தனர். கொரோனா தொற்று உலக மக்களை ரத்த கண்ணீர் வடிக்க வைத்த போது கூட சீனாவிற்காக முட்டு கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்தவர் அருணன்.

அதேபோல, கோடிகணக்கான இந்தியர்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றியது மத்திய அரசு. இதற்கு, நன்றி தெரிவிக்க வேண்டிய சிபிஐஎம், சீனாவின் புகழை பாடி வந்தன. சீனா பரப்பிய கொரோனா தொற்றில் நிலை தடுமாறி திணறி வந்த சிறிய நாடுகள், ஏழை நாடுகள், அண்டை நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளையும் சேர்த்து இந்தியா மீட்டது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் இன்று வரை மோடி அரசை மட்டுமே மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்படியாக, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்களின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், தங்கம் கடத்திய வழக்கில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ். இதனிடையே, நீண்ட சட்ட போராட்டம் நடத்தி தற்போது ஜாமீன் பெற்றுள்ளார். இதையடுத்து, அவ்வபோது இவர் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது பல்வேறு புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். தங்கம் கடத்திய வழக்கில் தனக்கும் மட்டும் தொடர்பு இல்லை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் பகீர் தகவலை தெரிவித்து இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திப்பில் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்து இருக்கும் கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து, அவர் கூறியதாவது; கடந்த ஜூன் 30, 2017 அன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒருவர் நான்கு நாட்கள் கேரளாவில் தங்கி இருந்தார். இதையடுத்து, அவர் தனது நாட்டிற்கு திரும்பி செல்லும் பொழுது விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர், எந்தவித அனுமதியும் இல்லாமல் செயற்கைக்கோள் போன் வைத்திருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் கேரள முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். இந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்ளாமல் கேரள மாநில அரசை அவர்கள் தொடர்பு கொண்டது இயற்கைக்கு மாறானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர் ஒரு பயங்கரவாதி என மீண்டும் ஒரு பகீர் தகவலை பத்திரிகையாளர் சந்த்திப்பில் தெரிவித்து இருக்கிறார் தங்க மங்கை ஸ்வப்னா சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசை விமர்சனம் செய்யும் சுந்தரவள்ளி, கனகராஜ், அருணன் போன்றவர்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் கேளர முதல்வர் குறித்து எப்போது வாய் திறப்பார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it