கோவில் நிதியில் வாகனங்கள்… வெளுத்தெடுத்த அண்ணாமலை!

கோவில் நிதியில் வாகனங்கள்… வெளுத்தெடுத்த அண்ணாமலை!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும்.

கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமே கூறியிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் பேசுகையில், கோவில் நிதியில் வாகனங்கள் வாங்கியிருக்கிறோம் என்று அந்த விதிமீறலை நியாயப்படுத்தியிருக்கிறார்.

அமைச்சரின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. அறிவாலய அரசின் இத்தகைய விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பாக வலியுறுத்தி வருகிறோம் என பதிவிட்டுள்ளார்.


Share it if you like it