இலங்கை மீது பிரதமருக்கு தனி பாசம்… 2 தமிழர்களை களமிறக்கி அசத்தல்!

இலங்கை மீது பிரதமருக்கு தனி பாசம்… 2 தமிழர்களை களமிறக்கி அசத்தல்!

Share it if you like it

இலங்கை முன்னாள் அதிபர், கோத்தபய ராஜபக்சே. இவரது, சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமர். இப்படியாக, நாட்டின் ஒட்டு மொத்த அரசு நிர்வாகத்தையும், தனது காலடியில் ராஜபக்சே குடும்பம் வைத்து இருந்தது. இதுதவிர, சீனாவின் அடிவருடியாகவும் இருந்து வந்தன. இதனால், சீனாவின் கடன் வலையில் சிக்கி தற்போது, மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் அந்நாடு இருந்து வருகின்றன.

அந்த வகையில், பசி, பஞ்சம் மற்றும் வறுமை காரணமாக, இலங்கையின் எதிர்காலமே தற்போது, பெரும் கேள்விக் குறியாக மாறி இருக்கின்றன. இதனால், அத்தியாவசிப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் இருந்து வருகின்றன. ஒரு லிட்டர் பால் 250 ரூபாய், அரிசி 500 ரூபாய், ஒரு ஆப்பிள் பழம் 150 ரூபாய் என சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இலங்கை மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாக மாறி இருக்கின்றன. இதையடுத்து, அந்நாட்டு மக்களின் நலனை கருத்தில், கொண்டு பாரதப் பிரதமர் மோடி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுதவிர, ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பான ‘சேவா இன்டர்நேஷனல்’ சார்பில் மலையக தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, இலங்கை தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசுக்கு நீண்ட அறிக்கையை சமர்பித்து இருந்தார். அந்த வகையில், முன்பை காட்டிலும் இலங்கை தமிழர்களுக்கு, பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்து வருகின்றன.

தி.மு.க. காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி போன்று வெற்று விளம்பரங்களை மத்திய அரசு தேடவில்லை. அதற்கு மாறாக, மேலும் பல உதவிகளை மோடி அரசு இலங்கைக்கு செய்து வருகின்றன. இதுதவிர, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என இரு தமிழர்கள் களத்தில் இருப்பதே சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கர்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய பிரதான தமிழர் கட்சிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஜெய்சங்கர்
Image

Share it if you like it