பா.ஜ.க தலைவரிடம் முதல்வரை கோர்த்து விட்ட அமைச்சர்!

பா.ஜ.க தலைவரிடம் முதல்வரை கோர்த்து விட்ட அமைச்சர்!

Share it if you like it

தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிலடி!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தமிழ் தாய் குறித்த ஓவியம் ஒன்றினை அண்மையில் வெளியிட்டு இருந்தார். அந்த ஓவியத்தில் திரிந்த சடை, தலைவிரி கோலம் மற்றும் விதவையைப் போல வெள்ளை நிற சேலை அணிந்து, ‘ழ’கர வேலை கையில் ஏந்திய நிலையில், கருப்பு நிறத்தில் தமிழ்தாய் காட்சியளித்தால். தமிழ்த்தாயை இப்படி, அலங்கோலமாக்கி விட்டாரே என பொதுக்கள் முதல் நெட்டிசன்கள் வரை கடும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த ஓவியத்தை வரைந்தது எழுத்தாளரும், ஓவியருமான சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழணங்கே’ என்ற தலைப்பில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்கிற வரிகளுடன் தமிழ் தாய் ஓவியத்தை நேற்றைய தினம் வெளியிட்டு இருந்தார். இந்த ஓவியத்தை ம.யாஷிகா என்பவர் வரைந்திருக்கிறார். இதையடுத்து, அந்த ஓவியம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பா.ஜ.க தலைவர் வெளியிட்ட ஓவியத்தில் ’ஸ’ எழுத்து இருப்பதாக சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து இருந்தார்.

இதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் கொடுத்த பதிலடி; தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள “ஸ” என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். “தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது! “ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அண்ணாமலையின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடாது என மேலிடம் கண்டிப்பான முறையில் உத்தரவிட்டதாக சொல்லப்படும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை, பா.ஜ.க தலைவரிடம் கோர்த்து விட்டு தங்கம் தென்னரசு எஸ்கேப் ஆகிவிட்டதாக இணையதளாவசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it