மோடியின் வழியில் அன்பு – பக்தி – நல்லெண்ணம் மூலம் மக்களை தன் வசமாக்கும் அண்ணாமலை

மோடியின் வழியில் அன்பு – பக்தி – நல்லெண்ணம் மூலம் மக்களை தன் வசமாக்கும் அண்ணாமலை

Share it if you like it

பொதுவாக சாமானிய மக்கள் ஆட்சியாளர்கள் அவர்களின் உயர்ந்த ஆடம்பரம் அந்தஸ்து அதிகார தோரணை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தங்களோடு நல்லுறவு பாராட்டுவதையே விரும்புவார்கள். அதிகார திமிர் இல்லாமல் உள்ளன்போடு தங்களின் ஒருவனாக ஒருமித்து வாழ்ந்து தங்களின் சுக துக்கங்களை உணர்ந்து யதார்த்த வாழ்வில் தாங்கள் எதிர்கொள்ளும் இடர்களை உள்வாங்கி அதற்கு தீர்வு காண்பவனையே தங்களின் ஒருவனாக தங்களின் தலைவனாக ஏற்றுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒருவன் அரியணையில் அமரும் போது தங்களின் வாழ்வும் வளமும் பாதுகாக்கப்படுவதோடு தங்களின் எதிர்கால சந்ததிகள் நலன் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் அவர்களின் பின்னே முழு நம்பிக்கையோடு அணிவகுத்து நிற்பார்கள்.

அறிவார்ந்த சமூகத்தின் இந்த நாடித்துடிப்பை உணர்ந்த ஆட்சியாளர்கள் அதன் வழியில் பயணிக்கும் போது எத்தனை விரோதங்கள் துரோகங்கள் சூழ்ந்து நின்றாலும் மக்கள் துணையோடு அத்தனையும் தகர்த்து தங்களின் சாம்ராஜ்யத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வழி நடத்திப் போவார்கள். இந்த சூட்சமத்தை அறியாத ஆட்சியாளர்கள் அல்லது பின்பற்ற தயார் இல்லாத அகம்பாவிகள் தங்களின் ஆட்சி அதிகாரம் மக்கள் செல்வாக்கு இழந்து ஒரு கட்டத்தில் செல்லா காசாகி விடுவார்கள்.

ஒரு சிலர் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து மக்களோடு மக்களாக இயல்பாக இருப்பது போல இரண்டர கலந்த உறவுகளைப் போல் ஏமாற்று அரசியலை செய்ய முயன்றால் அது அன்றைய தினம் விளம்பரம் தரும் செய்கையாக இருக்குமே தவிர அவர்களை மக்கள் செல்வாக்கு பெற்ற ஆட்சியாளர்களாக ஒருபோதும் மாற்றுவதில்லை.

சாமானிய மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்த இந்த நல்லெண்ண நம்பிக்கை நல்லுறவு தான் மரணித்து கால் நூற்றாண்டு கடந்த போதிலும் இங்கிலாந்து இளவரசி டயானா இன்னும் மக்கள் மனதில் வாழும் அதிசயம். இந்த உண்மையை உணராது பாசாங்கு செய்வதால் தான் பல ஆண்டுகளாக குடிசைகளில் நுழைந்து கூழ் குடித்து வயல் வரப்புகளில் சாமானிய மக்களோடு தரையில் அமர்ந்து அளவளாவியும் ஆண்ட பரம்பரை வந்த இன்றைய தலைமுறை இளவரசரும் இளவரசியும் இன்று வரை மக்கள் முன் செல்லாக் காசாக அரசியல் களத்தில் தோல்வி முகமாக நிற்கும் காரணம்.

உள்ளன்போடு தங்களை நேசிக்கும் ஒரு தலைவனை மக்கள் நிச்சயம் அடையாளம் கண்டு கொள்வார்கள். அந்த அடையாளத்தை அவர்கள் பல காலம் பரீட்சித்துப் பார்ப்பார்கள். அனைத்திலும் தேர்ந்து மக்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என்று பயணிக்கும் ஆட்சியாளர்களை கடவுளுக்கு இணையாக மதிக்கும் நம்பும் வழக்கம் மக்களுக்கு உண்டு . அதிலும் சாமானிய மக்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஒருவரை நம்ப தொடங்கி விட்டால் அவர்களின் வெற்றிக்காகவும் நலனுக்காகவும் தங்களின் முழு பங்களிப்பை வழங்க எப்போதும் தயங்குவதில்லை. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போகவும் தயாராக இருப்பார்கள். அந்த வகையில் மோடி என்ற மனிதர் எப்படி தனது நல்லெண்ணம் நல்லுறவு அடிப்படையில் மக்களின் மனதை வென்றாரோ கங்கையின் ஆசியோடு இறையருள் அடைந்தாரோ அதே வழியில் இன்று தமிழகத்தில் அண்ணாமலை தனது வெள்ளந்தியான அன்பு நல்லெண்ணம் கொண்டு சாமானிய மக்களை வசமாக்கி விட்டார். தனது பாரம்பரிய வளர்ப்பு பக்தி துணை கொண்டு தாமிரபரணி காவேரி தாயின் ஆசி பெற்றார். அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு அவர்கள் நம்பிக்கை பெற்ற ஆளுமையாக வளர்ந்து எதிரிகளையும் சப்தமின்றி சாய்க்க தொடங்கி இருக்கிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் சிறு வயதில் தேநீர் விற்ற ஒரு சிறுவனாக வாழ்க்கையை தொடங்கிய நரேந்திர தாமோதர் தாஸ் மோடி குஜராத்தின் முதல்வராக பதவியேற்று அம்ம மக்களின் பூகம்ப சீரழிவுகளையும் இடர்பாடுகளை எல்லாம் தனி மனிதனாக இரவு பகல் பாராது சரி செய்த உணர்வு பூர்வமான நிர்வாகமும் அதன் மூலமான மக்கள் ஆதரவும் தான் அவரை மூன்று முறை முதல்வர் ஆக்கியது.

சொந்த மாநில மக்களுக்கு எதை செய்தோமோ அதை தேசம் முழுவதும் விஸ்தரிக்க வேண்டும் என்ற அவரின் உயர்ந்த எண்ணம்தான் பிரதமர் பதவி வரை உயர்த்திப் போனது .பதவி வந்தாலும் பணிவும் மாறாமல் பக்தி மாறாமல் பாரதத்தின் ஹிருதயமான காசியை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆன்மீக உணர்வும் கங்கையை தூய்மைப்படுத்தி சர்வதேச அளவில் பாரதத்தின் ஆன்மீக மாண்பை மீண்டும் தலை நிமிரச் செய்ய வேண்டும் என்ற அவரின் ஆழ்மனதின் உத்வேகமும் தான் அவரை வாரணாசியில் கொண்டு போய் நிறுத்தியது.

பிரதம வேட்பாளராக போட்டியிட்டு வாரணாசியில் வெற்றி பெற்று காசியை மீட்டெடுத்தவர். கங்கையை தூய்மைப்படுத்தியவர். அந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி படி பிரதமராக திரும்ப போய் தனக்கு வெற்றியும் வாழ்வும் அளித்த கங்கா தேவிக்கு ஆரத்தி எடுத்து வணங்கினார். அதன் மூலம் இது என்றைக்கும் ஆன்மீக பூமி என்பதும் காசி செழிக்க பாரதம் செழிக்கும் .கங்கை துலங்க யாவும் துலங்கும் என்ற ஆன்மீக சூட்சமத்தையும் நிலை நிறுத்தினார். அன்று அவர் கங்கைக்கு ஆரத்தி எடுத்து தனது நன்றி கடனை மட்டும் செலுத்தவில்லை. கங்கையின் ஆசியோடு காசியை மீட்டதை போல் பாரதத்தையும் மீள் கட்டமைப்பு செய்யவும் உலக அரங்கில் தேசத்தை தலைநிமிரச் செய்யவுமான தனது நேர்த்தியையும் கங்கைக்கு சொல்லி வைத்தார்.

கங்கை துலங்கியது. காசி மீண்டெழுந்தது. கங்கையின் மைந்தனான மோடி என்பவனை துணையோடு தனது சக சகோதரியான காவிரியும் தாமிரபரணியும் செழிக்கும் தமிழ் மண்ணை மீட்டெடுக்கவும் காசியில் சகோதர பூமியான ராமேஸ்வரத்தை மீள் கட்டமைப்பு செய்யவும் மோடியின் வழியில் காலம் அண்ணாமலை என்பவனை வசப்படுத்தி கொண்டது.

இதோ எப்படி அன்று மோடி கங்கை கரையில் ஆரத்தி எடுத்து இந்த தேசத்தின் ஆன்மீக துடிப்பையும் உலகிற்கு வழிகாட்டும் கலாச்சார தொன்மையையும் உயர்த்திப்பிடித்தாரோ? அதே வழியில் அண்ணாமலையும் இன்று தாமிரபரணிக்கு ஆரத்தி எடுத்து வணங்குகிறார். நொய்யல் விழாவில் ஆரத்தி எடுத்து வணங்குகிறார் .காவேரி கரைகளிலும் வைகை நீரிலும் கையெடுத்து வணங்கி பணிகிறார். இந்த மண்ணின் பக்தியும் பாரம்பரியமும் உச்சம் காட்டும் காவடி ஆட்டம் ஆடி அதிகாரம் தோரணை எல்லாம் பக்திக்கு முன் இருந்த இடம் தெரியாமல் போகும் என்ற தனது சாமானிய நடவடிக்கையின் மூலம் இந்த மண்ணின் கடைக்கோடி மனிதனையும் இவனே தனக்கானவன் இவனே தன்னையும் தன் தேசத்தையும் வழிநடத்த தகுதியான தலைவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை விதைத்து விட்டார்.

ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒரு அசாதாரண அரசியல் ஆளுமை நினைத்த மாத்திரத்தில் மாநில அரசில் எந்த மாற்றத்திற்கும் நிர்பந்தம் கொடுக்க முடியும். கண நேரத்தில் பிரதமரை தொடர்பு கொண்டு பேச முடியும் என்ற உச்சபட்ச ஆளுமையாக வலம் வந்த போதிலும் ஒரு நான்கு முழ வேட்டி காலில் செருப்பு கூட இல்லாத பக்தி நெற்றியில் மங்கல அடையாளத்தோடு ஒரு சாமானிய மனிதனோடு பக்தி பெருக்கில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முதல் நொய்யல் விழா வரை ராமேஸ்வரம் கோவில் முதல் கொங்கு மண்டலம் வரை அவர் மக்களோடு மக்களாக இரண்டற கலந்து விட்டார். மக்களின் குறைகளை கேட்டு அறிவதும் கண்ணீர் விட்டு கதறுபவர்களுக்கு ஒரு சொந்த சகோதரனைப் போல ஆறுதல் சொல்வது மாற்று சிந்தனை உடையவர்களை கூட கூட உலுக்கி பார்க்கிறது .

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு சாமானிய மக்களின் குறைகளுக்கு நிவாரணம் தேடுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் வெற்று வார்த்தைகளை வாக்குறுதிகளாக வழங்காமல் சொன்னபடி செய்து காட்டி அந்நிய நாட்டில் சிறைப்பட்டவர்களையும் மீட்டெடுத்து தனது வார்த்தையை காப்பாற்றுவதன் மூலம் கட்சி அரசியல் ஆட்சி அதிகாரம் எல்லாம் கடந்து ஆழ் மனதில் மக்கள் நல நல்லெண்ண சிந்தனை இருந்தால் மக்கள் மனதில் நல்ல நம்பிக்கையை அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கையும் பெற முடியும் என்பதை இன்றைய தலைமுறைக்கு அண்ணாமலை ஆணி அடித்தார் போல புரிய வைத்திருக்கிறார்.

இதன் மூலம் பணபலம் படை பலம் அதிகார பலம் ஊடக செல்வாக்கு என்று அசுர பலத்தோடு ஊடக பிம்பத்தில் ஆட்சி அதிகாரத்தை விளம்பர மாயையாக நகர்த்தி போகும் ஆட்சியாளர்களை கண்டு வெறுத்துப்போன பல தரப்பட்ட மக்களும் இந்த அண்ணாமலை இன்னும் எளியவனை தங்களை மீட்க வந்த அபயமாகவே பார்க்கிறார்கள்.

அதன் காரணம் போகும் இடமெல்லாம் சொந்த குடும்பத்தைப் போல வரவேற்பு .அண்ணன் தம்பி போல உபசரிப்பு. சாதி மத இனம் மொழி கடந்த நட்புணர்வு .சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் அனைவரும் கொண்டாடும் ஈர்ப்பு என்று பட்டி தொட்டி எங்கும் வெற்றி முரசு கொட்டும் அரசியல் ஆளுமையாக அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அண்ணாமலை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

ஒத்த ஓட்டு அண்ணாமலை சின்னப்பையன் அண்ணாமலை நேற்று வந்தவன் நம்மை என்ன செய்து விடுவான் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று ஏளனம் பேசியவர்கள் இன்று அந்த அண்ணாமலையின் பெயரை கேட்டவுடன் எழுந்து ஓடுவதும் அந்த அண்ணாமலைக்கு கூடும் கூட்டத்தையும் அதன் அடி ஆழத்தையும் உணர்ந்து என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமலே வன்மத்தை கக்கி பேசுவதுமே அண்ணாமலை என்ற அந்த தனி மனிதன் அவனது கட்சி அடையாளம் கல்வி பொருளாதார அந்தஸ்து சாதிய அடையாளம் எல்லாம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் தன்னில் ஒருவனாய் தனக்கான ஒருவனாய் எதிர்காலத்தின் நம்பிக்கை பெற்ற தலைவனாக முழு மனதோடு ஏற்றுக் கொண்டு ஒருமித்த குரலாக அவரை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு போக தயாராகி விட்டதன் சாட்சியம்.

ஆம் எப்படி தன் மடியில் வந்து அடிபணிந்து கையெடுத்து வணங்கி தன் ஆசியோடு தன்னையும் விட்டு அதன் மூலம் தேசத்தையும் மீட்க வேண்டும் என்ற மோடி என்ற சாமானியனுக்கு கங்காதேவி வரம் அளித்து வாழ்வளித்து தேசத்தை பாதுகாத்தாளோ அதே வழியில் இன்று காவிரி தாமிரபரணி நொய்யல் தாய்களும் தன்னில் பணிந்து வணங்கி மக்களின் நலன் வேண்டி நிற்கும் அண்ணாமலை என்ற தனி மனிதனை வரம் அளித்து வாழ்விக்க அவனை வெற்றியாளனாக அரியணை அமர்த்த தயாராகி விட்டார்கள்.

காவேரி தாமிரபரணி நொய்யல் என்ற சகோதரிகளின் இந்த முன்மொழிவை வைகை பாலாறு பெண்ணை பொருனை முல்லை கோமுகி திருவட்டாறு பொன்னி பவானி சிறுவாணி வேகவதி செய்யாறு அடையாறு என்று தமிழகமெங்கும் ஓடி செழிக்கும் இதர சகோதரிகளும் தவறாமல் வழிமொழிவார்கள். அவ்வழியில் அண்ணாமலை என்ற ஆளுமையின் வெற்றியும் மக்கள் செல்வாக்கும் இந்த மண்ணில் சந்தேகத்திற்கு இடமின்றி நிலை பெற்று விட்டது.இந்த மக்கள் நம்பிக்கை மற்றும் செல்வாக்கை தக்க வைத்து அதை தேர்தல் வெற்றியாக மாற்ற வேண்டிய கடமை பொறுப்பு அவருக்கும் அவர் சார்ந்த அனைவருக்கும் இருக்கிறது. ஒருமித்த கைகளாக இணைந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.


Share it if you like it