ராகுல் காந்திக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி..!

ராகுல் காந்திக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க குறித்து மக்களவையில் தெரிவித்த கருத்திற்கு. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ராகுல் காந்திக்கு தக்க பதிலடியை கொடுத்து பேசிய காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி. பா.ஜ.க ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று மக்களவையில் ஆவேசமாக கூறியிருந்தார். இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 2014 பாரதப் பிரதமராக மோடி வர முடியாது, என்று கூறினார் சிங்கிள் மெஜாரிட்டியில் ஆனோம். எந்த காரணத்தை கொண்டும் மோடி திரும்ப பிரதமர் ஆக மாட்டார் என்று கூறினார். ஆனால் 303 சீட்டில் வென்றோம்.

எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தில் பா.ஜ.க வராது என்று அவர் கூறியுள்ளார். நிச்சயம் நாங்கள் தனி மெஜாரிட்டியில் வருவோம், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ராகுல் காந்தியின் ஜாதகப்படி அவர் சொல்வது எல்லாம் அவருக்கு எதிராக நடக்கும். அவர் சொன்ன கருத்தில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் நன்றி தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it