சென்னையில் மழை நீர் வெளியேறாமல் இருப்பதற்கு குப்பைகளே காரணம் சன் நியூஸ் செய்தி.
மழை நீர் வெளியேறாமல் இருப்பதற்கு முந்தைய ஆட்சியாளர்கள், செய்த தவறே காரணம் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில். மேயராகவும், துணை முதல்வராகவும், இருந்த பொழுது, ஸ்டாலின் என்ன? செய்தார். ஏன்? அப்பொழுது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விடியல் அரசிற்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தார்.
பா.ஜ.க தலைவரின் கேள்வி மக்களை சிந்திக்க தூண்டியதை அடுத்து, வெள்ள நீரில் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி மக்கள் தங்கள் கடும் விமர்சனத்தை தி.மு.க அரசின் மீது வைக்க துவங்கிய உடன், வெள்ள நீர் வெளியேறாமல் இருப்பதற்கு பிளாஸ்டிக் குப்பைகளே காரணம், சன் நியூஸ் அந்தர் பல்டி அடித்து செய்திகளை வெளியிட துவங்கியுள்ளது.
பாரதப் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடற்கரையை தூய்மை செய்த பொழுது. அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டிய சன் நியூஸ் போன்ற ஊடகங்கள் பா.ஜ.க தலைவரை கேலி, கிண்டல், செய்யும் விதமாக செய்திகளை அந்நாட்களில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




