தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க திட்டமிடும் சனாதன விரோதிகள்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க திட்டமிடும் சனாதன விரோதிகள்

Share it if you like it

இன்னும் சில தினங்களில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. ஆவணி மாதம் அமாவாசை அடுத்த வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் ஜெயந்தி நடந்ததாக புராணங்கள் வழி அறியப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் அமாவாசை கடந்த வளர்பிறை சதுர்த்தி நாளில் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

வட பாரதத்தில் கணேஷ் சதுர்த்தி என்றும் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி என்றும் பெயரில் மாறுபட்டாலும் ஆன்மீகம் வழிபாட்டு முறைகளில் எங்கும் மாறுபாடுகள் இருப்பதில்லை. வீதி எங்கும் விநாயகர் சிலை வீடு தோறும் களை கட்டும் பண்டிகை கொண்டாட்டம். ஊரே ஒன்று திரண்டு விநாயகர் சிலைகளை உற்சவமாக கொண்டு போய் நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யும் கோலாகலமான திருவிழா கொண்டாட்டம் என்று விநாயகர் சதுர்த்தி விழா 3 முதல் 5 – 9 நாட்கள் என்று அவரவர் வசதிக்கும் சூழலுக்கும் ஏற்ப திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த விநாயகர் சதுர்த்தி விழா காலங்களில் களிமண் சிலைகள் கைப்பிடி அளவு தொடங்கி பிரம்மாண்டமான உயரம் வரையிலும் சிலைகள் வடிக்கப்பட்டு விற்பனைக்கு வரும். இதில் சம்பிரதாய அடிப்படையில் வெறும் களிமண் சிலைகளை மட்டும் வைத்து அதற்கு பூஜைகள் நடத்துவதும் வழக்கம். பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட சிலைகள் அதற்கு விசேஷமான வண்ணப் பூச்சுகள் என்று அச்சு அசல் உலோக வகை திருமேனிகளைப் போலவே வடிவமைக்கப்பட்ட திருமேனிகள் வைத்து பூஜிக்கப்படுவதும் வழக்கம். இதற்காக பல மாதங்கள் திட்டமிட்டு உழைத்து பல லட்சக்கணக்கான விநாயகர் திருமேனிகளை உருவாக்குவதில் கைவினை தொழிலாளர்கள் இரவு பகலாக உழைப்பார்கள். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் நிர்மாணம் மற்றும் விற்பனை அதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான் அவர்களுக்கு ஆண்டு முழுவதுமான வாழ்வாதாரம்.

இந்த விநாயகர் சதுர்த்தியின் வீதிதோறும் விநாயகர் வீடு தோறும் விநாயகர் ஊர்தோறும் விநாயகர் உற்சவம் விஜர்சனம் திருவிழா என்ற வகையில் பூஜை பொருட்கள் பூக்கள் பழங்கள் என்று பல்வேறு பொருட்களின் வியாபாரம் உச்சம் தொடும் . அந்த வகையில் விவசாய பொருட்கள் முதல் பல்வேறு உற்பத்தி தொழில் சார்ந்த பல தரப்பினரும் இந்த விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் வாழ்வாதாரம் பெறுவார்கள்.

களிமண் மூலம் விநாயகர் சிலை செய்து வழிபடுவதும் அதை நீர் நிலைகளில் கரைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஆன்மீகம் போற்றும் ஆண்டுதோறும் விழா உற்சவம் அதன் மூலமான பக்தி மக்கள் ஒருங்கிணைப்பு என்று பன்முகத்தன்மை கொண்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை எப்போதும் ஒரு மகிழ்ச்சியும் ஈர்ப்பும் உண்டு. அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் தங்களால் ஆன பங்களிப்பை விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அர்ப்பணம் வழங்கி மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது சனாதன தர்மத்தின் மரபு .

கொரோனா கால முடக்க காலத்தில் மக்கள் கூடுகை தவிர்க்க வேண்டும் தொழில் வருமானம் இல்லாத சூழல் நோய் பரவும் அபாயம் காரணமாக இந்த விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் களை இழந்தது . பெரும் கட்டுப்பாடுகள் விதிகளுடன் சம்பிரதாயத்திற்காக ஆங்காங்கே சிறிய அளவில் மட்டும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அரை நூற்றாண்டு காலமாக இந்து விரோதிகளின் பிடியில் ஆட்சி அதிகாரம் இருக்கும் காரணமாக தமிழகத்தில் கொரோனா காரணம் காட்டி முழுமையாக இந்து பண்டிகைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. அதில் விநாயகர் சதுர்த்தியும் அடக்கம்.

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் கொரோனா கால தடை காரணமாக தடை பட்ட விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு உற்சாகமாக கொண்டாடப்படும். கொண்டாடப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களுக்கு தமிழகத்தில் ஆளும் அரசின் இந்து விரோத போக்கும் அரசு எந்திரம் மூலமாக முன்னெடுக்கும் அடக்குமுறையும் விநாயகர் சதுர்த்தி விழாவை முழுமையான ஈடுபாடு மகிழ்ச்சியோடு கொண்டாட முடியுமா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

மறுபுறம் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கும் விஜர்சன விழா நடத்துவதற்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டிய நீதிமன்றங்கள் ஒரு படி மேலே போய் வீதி தோறும் சிலை வைத்து உற்சவம் செய்ய விநாயகர் கேட்டாரா? என்று கேள்வியை கேட்கிறது. சிலைகளை வைக்கும் படி விநாயகர் கேட்கவில்லை .ஆனால் இந்த மண்ணின் சனாதன தர்மத்தின் வழியில் பாரம்பரிய பண்டிகை உற்சவங்கள் மக்கள் கொண்டாடும்போது அதற்கு முழு பாதுகாப்பும் வழிகாட்டுதலையும் வழங்கி நடத்திக் கொடுக்க வேண்டியது நீதிமன்றம் உள்ளிட்ட அரசு எந்திரங்களின் முதல் கடமை .அதை செய்ய தவறுவதோடு தடை செய்யும் நோக்கில் கேள்வியும் எழுப்பும் வேதனையை எங்கே போய் மக்கள் முறையிட முடியும் ? அரசு எந்திரத்தால் தடை வரும்போது நீதிமன்றத்தின் கதவை தட்ட முடியும். நீதிமன்றங்களே புண்படுத்தினால் மக்கள் எங்கே போய் முறையிடுவது ? என்ற பரிதாப நிலை இன்று தமிழகத்தில் நிலவுகிறது.

மறுபுறம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தேவையான திருமேனிகளை இரவு பகலாக உழைத்து அரும்பாடு பட்டு நிர்மாணம் செய்யும் கைவினை தொழிலாளர்களை காவல்துறை மற்றும் ஆளும் கட்சியின் சார்பில் கடுமையாக மிரட்டுவது எச்சரிப்பது கெடுபிடி காட்டுவது என்று அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். சில இடங்களில் சிலைகளை கைப்பற்றி வியாபாரத்தை தடுப்பது. விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் திருமேனிகளை சேதப்படுத்துவது வியாபாரிகளை மிரட்டுவது சாலையோரங்களில் கடை போடக்கூடாது என்று தடை விதிப்பது என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுப்பது என்று இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கான அத்தனை முனைப்புகளையும் செய்கிறார்கள்.

இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய இந்து அறநிலையத்துறை அமைச்சரோ இன்னும் ஒரு படி மேலே போய் வீட்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்தாலே விநாயகர் வேண்டுதலை கட்டாயம் நிறைவேற்றுவார். பொது இடத்தில் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சாமி சிலைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று வியாக்கியானம் பேசுகிறார்.

விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வு களிமண் சிலை பிரதிஷ்டையும் விஜர்சனமும் தான். அதற்காக பல மாதங்கள் முன்பு முன் பணம் பெற்றுக் கொண்டு பிரம்மாண்டமான சிலைகளை வடிப்பது கைவினைஞர்களின் பணி .அதுதான் அவர்களின் வாழ்வாதாரம் .அதையே முடக்கி விட்டால் மொத்தமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை பிரதிஷ்டை மற்றும் வழிபாடு உற்சவமும் கொண்டாட்டமும் களை இழந்து விடும். அதைத்தான் இந்த இந்து விரோத ஆளும் அரசுகள் திட்டமிட்டு செய்கிறது. ஆனால் செய்தித்தாள்கள் ஊடகங்கள் சமூக ஊடகங்கள் வழியாக ஆளும் கட்சி மற்றும் அரசு இயந்திரங்களின் நேரடி மறைமுக அராஜகங்கள் வெளிவந்த போதிலும் இதை எல்லாம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து மாநில மக்களின் வாழ்வுரிமையை சட்டத்தின் வழியில் பாதுகாக்க வேண்டிய மாநில ஆளுநர் அமைதியாக வேடிக்கை பார்ப்பது தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்துகிறது.


Share it if you like it