தமிழக பா.ஜ.க கட்சியின் முன்னாள் தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜனை. பெண் என்று கூட பார்க்காமல். தி.க, திமுக, விசிக, குறிப்பிட்ட கட்சியின் முன் களப்பணியாளர்கள், சில்லறை போராளிகள், என்று அவரின் உருவத்தையும், உழைப்பையும் கேலி, செய்தனர்.
அதனை எல்லாம் பொருட்படுத்தாமல்., தன் கடின உழைப்பின் மூலம். இன்று தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநராக உள்ளார். அண்மையில் அவருக்கு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு. அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் மல்டி எத்னிக் சொலிசன் என்ற அமைப்பு. உலக அளவில் ஆளுமை மிகுந்த 20 பெண்களை தேர்வு செய்து இருந்தது. அதில் ஒருவராக தமிழசையை தேர்வு செய்து இருந்தது. இது தமிழக மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பங்காரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புதுவை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தர்ராஜன். நம் புதுவை மாநில நலனில் அக்கறை கொண்டு தூய தமிழிலே அனைத்து மக்களிடம் பேசி குறைகளை தீர்த்து வருகிறார். அனைத்து அதிகாரிகளையும், அழைத்து பேசி அரசு துறைகளை சிறப்பாக இயக்குகிறார்.
டாக்டர் என்ற அடிப்படையிலும் சுகாதாரத்துறையை நேரில் சென்று கண்காணித்து. அவர் எடுத்த சீரிய முயற்சியினால் புதுவை மக்கள் நலமாக இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் மலிவு விலையில் உணவு. ஒரு ரூபாய்க்கு முகக்கவசம், ஏழை குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் 5 கிலோ உணவு தானியம். போன்ற பல திட்டங்களையும் உடனுக்குடன் கிடைக்கச் செய்து அனைத்து சமுதாய மக்களையும் தாயுள்ளத்தோடு வழிநடத்தி செல்கிறார் என்று பங்காரு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.