குற்றவாளிகள் கைது : அதிரடி காட்டும் என்ஐஏ !

குற்றவாளிகள் கைது : அதிரடி காட்டும் என்ஐஏ !

Share it if you like it

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை கொல்கத்தா அருகே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. அவர்கள் அத்புல் மதின் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாசெப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து இந்த இருவரும் தலைமறைவாக இருந்தனர்.

இதில் ஷாசிப் ஹுசைன் என்பவர் தான் அந்த ஹோட்டல் வளாகத்தில் வெடிகுண்டு வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், உளவுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதியை என்ஐஏ குழு கண்டுபிடித்தது. இந்த சூழலில் ஷாசிப் ஹுசைனை என்ஐஏ கைது செய்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த மாதம் 1ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டு, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

மேலும் இந்த குண்டு வெடிப்பில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் எனக் கருதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த பயங்கரவாத வழக்கில் தொடர்புடைய சிலரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெல்லாரியை சேர்ந்த ஷபீர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபருடன் இவருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருடன் சேர்த்து இதுவரை மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரது புகைப்படங்களையும் இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *