கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வரும் இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) நேற்று (மார்ச் 21) இரவு கைது செய்தது. பணமோசடி வழக்கில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூத்த பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், நிதிக் குற்ற அமைப்பின் செயலை ஆதரித்து, உள்ளூர் ஊடகங்களிடம், “இது ஊழலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் செய்யப்படும் சட்டச் செயல்முறையாகும். சட்டம் அதன் போக்கில் செல்லட்டும் என்று கூறினார்.
டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆம் அத்மீ கட்சியினர் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ED யின் செயலுக்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணையை கோரிய நிலையில், நள்ளிரவு விசாரணை இருக்காது என்று கூறப்பட்டது. இதற்கிடையில், இன்று காலை 10 மணிக்கு டெல்லியின் ஐடிஓவில் உள்ள தலைமையகத்திற்கு வெளியே ஒரு போராட்டத்திற்கு ஒன்றுகூடுமாறும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) அலுவலகங்களுக்கு வெளியே நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும் அக்கட்சி தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.