மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரை பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் பங்கம் செய்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளராக இருப்பவர் அஸ்வத்தாமன். இவர், பிரபல யூ டியூப் இணையதளமான தினமலருக்கு அளித்த பேட்டியில் நெறியாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இவ்வாறு கூறினார் ;
நடிகர் கமல் அரசியலில் இருக்கிறாரா? என்பதை பல நேரங்களில் அவரே மறந்து விடுகிறார். அவரது, கட்சியில் முன்பு நிறைய ஆட்கள் இருந்தார்கள். இன்று எத்தனை ஆட்கள் அவருடன் இருக்கிறார்கள். ஒரு தொகுதியில் அவரால் வெல்ல முடிந்ததா?. அவர், நின்ற தொகுதியில் எங்களிடம் தோல்வியை தழுவினார். மக்கள் அவருடன் இருந்திருந்தால் தேர்தலில் வென்று காட்டியிருக்க வேண்டும். கட்சியில் இன்று யார்? இருக்கிறார்கள். அவரிடம் இன்று கட்சியே இல்லை என்பதே எனது உறுதியான கருத்து. தான் கட்சி நடத்துவதையே அவரே மறந்து விட்டார். பா.ஜ.க.வில் எத்தனை பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். மக்கள் நீதி மையத்தில் எத்தனை பொறுப்பாளர்கள் உள்ளனர் என்று அஸ்வத்தாமன் நெறியாளரிடம் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த torchlight fuse போகலிங்க, மொத்தமா பொகஞ்சே போச்சு எனவும், நான் அப்பவே சொன்னேன் டார்ச் லைட் மட்டும் தான் அவனோடது அதுல இருக்குற பேட்டரி தி.மு.க.வோடதுன்னு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.