Share it if you like it
மத்திய அரசு கொடுக்கும் அரிசியில் தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிக்கொள்கிறது என பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் கூறியிருக்கிறார்.
பிரபல இணையதள ஊடகமான ஆதன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது ;
40 கிலோ அரிசி போட்ட ரேஷன் கடைகளில், இப்போ வெறும் 20 கிலோ மட்டும் தான் கொடுக்கிறார்கள். ஏன் என்று பொதுமக்கள் கேட்டால் மோடி அரிசியை நிப்பாட்டி விட்டார் என்று பொய் சொல்கிறார்கள். உண்மை என்னவெனில் அரிசியை நிப்பாட்டியது ஸ்டாலின் அரசு. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு பருக்கை அரிசியை கூட இவர்கள் வழங்கவில்லை. முற்றிலும் நிறுத்தி விட்டார்கள். முழுமையாக கொடுக்கும் ஒரே அரசு மத்திய அரசு தான் என அஸ்வத்தாமன் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Share it if you like it