சிறுவாச்சூர் பகுதியில் உள்ள கோயில்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டு சூறையாடப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
05.10.2021 இரவு சிறுவாச்சூர் மலைக்கோவிலான செல்லியம்மன் , பெரியசாமி கோவிலில் உள்ள சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இது சதுரகிரி, ,திருவண்ணாமலை, போன்றே ஒரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும். சிறுவாச்சூர் பிரதான கோவிலில் உள்ள மதுரகாளியம்மன் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே அந்த கோவிலில் இருப்பதாகவும் மற்ற நாட்களில், இந்த மலைக்கோவிலில் இருப்பதாகவும் ஐதீகம். இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனத்தில் சிவன், சக்தி, மற்றும் பெருமாள், பைரவர், உட்பட அந்த மலையில் தவம் செய்த சித்தர்களின் இறை ரூபங்கள் உட்பட பலவும் இங்கு வீற்றிருக்கின்றன. இதில் பல சிலைகள் குறிப்பாக பெண் தெய்வங்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
ஒரு நாள் கழித்து , 07.10.2021 இரவு பெரியாண்டவர் கோவில் சேதப்படுத்தப்பட்டது.
புணரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட 22 நாட்களில், அந்த கோவிலின் எல்லா கற்சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 09.10.2021 அன்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின், அறிவுறுத்தலுக்கு இணங்க பா.ஜ.க செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் மற்றும் பெரம்பலூர் பாஜக மாவட்டத் தலைவர் சந்திரசேகர் மற்றும் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தனர்.
ஆனால் இன்று வரை ஸ்டாலின் அரசும், தமிழக காவல்துறையும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டதன் விளைவாக இரண்டு நாட்களுக்கு முன்பு, 26.10.2021 அன்று இரவு மீண்டும் மலைக்கோவில் சேதப்படுத்தப்பட்டு மிகப்பெரிய சிலைகள் எல்லாம் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் ஸ்டாலின் அரசு குற்றவாளிகளின் செயலுக்கு ஏற்ப நடந்து கொள்கிறதோ என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல ஆந்திராவில் பல இந்து கோவில்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 19 மாதங்களில் 128 கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.