அஸ்ஸாமில் தொடரும் மதரஸா இடிப்பு!

அஸ்ஸாமில் தொடரும் மதரஸா இடிப்பு!

Share it if you like it

அஸ்ஸாம் மாநிலத்தில் மதரஸாக்கள் இடிப்பு தொடர்ந்து வருகிறது. 3-வதாக இன்று காலை போங்கைக்கான் மாவட்டத்தில் மற்றொரு மசூதி இடிக்கப்பட்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாட்டுக்கு எதிராகவும், மாநிலத்துக்கு எதிராகவும் சதிச் செயல்களில் ஈடுபடுபவர்களையும், சதித் திட்டம் தீட்டுபவர்களையும் மாநில போலீஸார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், மாநிலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றதாக மோரிகான் மாவட்டம் மொய்ராபரியில் ஜாமி-உல்-ஹூதா என்கிற மதரஸாவை நடத்தி வந்த முப்தி முஸ்தபா மற்றும் 11 மௌலவிகளை போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். இவருக்கு அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததும், முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தனது மதரஸாவில் வைத்து பயங்கரவாத பயிற்சி அளித்ததும் தெரியவந்தது. பங்களாதேஷின் பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணி உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நன்கொடை பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, முப்தி முஸ்தபா நடத்தி வந்த மதரஸாவை, மாநில அரசு இடித்துத் தரைமட்டமாக்கியது.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய மாநில அரசு, பயங்கரவாத செயல்கள் மற்றும் ஜிகாதி நடவடிக்கைகளில் ஈடுபடும் மதரஸாக்களை இடித்து தரைமட்டமாக்கி வருகிறது. அந்த வகையில், முப்தி முஸ்தபா நடத்தி வந்த மதரஸாவைத் தொடர்ந்து மற்றொரு மதரஸா இடிக்கப்பட்ட நிலையில், இன்று இன்னொரு மசூதி இடிக்கப்பட்டு வருகிறது. அஸ்ஸாம் மாநிலம் போங்கைகான் மாவட்டம் கபைடரி பகுதி 4-ல் மர்கசுல் மா ஆரிஃப் குவாரியானா மதரஸா செயல்பட்டு வந்தது. இந்த மதரஸாவிலும் இஸ்லாமி இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை மூலம் மாநில அரசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, விசாரணை நடத்தி மாநில உளவுப்பிரிவு போலீஸார், முப்தி முஸ்தபா நடத்திய மதரஸாவை போலவே, இந்த மதரஸாவிலும் பயங்கரவாத நடவடிக்கைகளி நடப்பதை கண்டறி்ந்தது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட மதரஸாவை இடிக்க மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை மதரஸாவை இடிக்கும் பணி தொடங்கி இருக்கிறது.


Share it if you like it