கவர்னர் உரையில் அரசியலை சேர்க்கலாமா.. அது கட்சி மேடையா..? ஸ்டாலினை விளாசிய போலீஸ் அதிகாரி!

கவர்னர் உரையில் அரசியலை சேர்க்கலாமா.. அது கட்சி மேடையா..? ஸ்டாலினை விளாசிய போலீஸ் அதிகாரி!

Share it if you like it

கவர்னர் உரையில் அரசியலை சேர்க்கலாமா? அண்ணா நாமம் வாழ்க, கருணாநிதி வாழ்க, பெரியார் வாழ்க என்று சொல்வதற்கு கவர்னர் என்ன அரசியல்வாதியா என்று தி.மு.க.வினரை வெளுத்து வாங்கி இருக்கிறார் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியும், மூத்த பத்திரிகையாளருமான வரதராஜன்.

தமிழக சட்டமன்றத்தின் நிகழாண்டு முதல் கூட்டத் தொடர் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையில் தி.மு.க. ஆட்சியையும், தி.மு.க. தலைவர்களையும் புகழ்ந்து பேசுவது போன்ற வார்த்தைகள், வாசகங்கள் இடம்பெற்றிருந்ததால், அதுபோன்ற வார்த்தைகள் வாசிக்காமல் தவிர்த்து விட்டார் கவர்னர். இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு சரியான நோஸ்கட்டாக அமைந்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இது சபையை மீறிய செயல் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி அவையை விட்டு வெளியேறினார். இதுவும் முதல்வரை அவமானப்படுத்துவது போல அமைந்து விட்டது.

எனவே, கவர்னரை பதிலுக்கு அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் தி.மு.க.வினர் கெட் அவுட் ரவி என்று போஸ்டர் அச்சடித்து ஒட்டியதோடு, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் டிரெண்டாக்கினர். மேலும், தாங்கள்தான் கவர்னரை அவையை விட்டு வெளியேற்றியதுபோல சித்தரித்து புளகாங்கிதம் அடைந்தனர். ஆனால், கவர்னரோ, கவர்னர் மாளிகையோ இதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. மறுநாளே குடிமைப்பணித் தேர்வை எழுதி வெற்றிபெற்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை உற்சாகம் மற்றும் ஊக்கப்படுத்தினார்.

அதேசமயம், கவர்னருக்கு எதிராக கோஷமிட்டது, தீர்மானம் கொண்டுவந்தது உள்ளிட்ட தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடு, அரசியல் பார்வையாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியும், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஆர்.வரதராஜன், தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வரதராஜன், “நீங்கதான் அண்ணா வாழ்க, கருணாநிதி வாழ்க, பெரியார் வாழ்கன்னு சொன்னா, கவர்னரும் அதே மாதிரி சொல்லணுமா? ஒரு கவர்னர் படிக்கும் உரையானது அரசியல் கலப்பில்லாத நடுநிலையோடு இருக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த உங்களுக்கு ஜால்ரா போடும் கவர்னர்கள், நீங்கள் கொடுத்ததை எல்லாம் அப்படியே படித்துவிட்டுச் சென்றார்கள். அதற்காக எல்லோரும் அப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, கவர்னர் உரையில் அரசை புகழ்ந்து ஒரு வார்த்தை கூட இடம்பெறாது. கவர்னர் படிக்க வேண்டியது என்பதால் நடுநிலைமையோடு இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து தயாரித்திருப்பார்கள். அதுவல்லவோ மரபு. அதைவிடுத்து, அண்ணா நாமம் வாழ்க, கருணாநிதி நாமம் வாழ்க, பெரியார் நாமம் வாழ்கன்னு எழுதிக் கொடுத்தா, கவர்னரும் அப்படியே படிக்க வேண்டுமா? நீங்க அரசியல்வாதி, உங்களோட சட்டமன்றம். நீங்க என்னவேணாலும் துதி பாடிக்கங்க. கவர்னர் அப்படி செய்ய முடியாது.

கவர்னர் உரை எந்பது, இந்தாண்டு மக்களுக்கு நீங்கள் என்னென்ன திட்டங்களை செய்யப் போகிறீர்கள் என்பதை சொல்லப்போவதுதான். அது நடுநிலைமையாக இருக்க வேண்டும். நீங்க பேசும்போது என்னவேணா பேசிக்கங்க. ஆனால், கவர்னர் சட்டமன்றத்தை அரசியல் மேடையாக்க முடியாது. அதனாலதான், நீங்க கவர்னருக்கு கொடுத்தனுப்பிய உரையில் இந்தெந்த வார்த்தைகள் அரசியல் சார்ந்ததாக இருக்கு. ஆகவே, அவற்றை நீங்குங்க என்று கூறியிருந்தார். நீங்க பதில் கொடுத்தீங்களா? அதனாலதான், அவரு அந்த வார்த்தைகளை விட்டுட்டு படிச்சாரு. இதில் தவறே இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை விளாசித் தள்ளி இருக்கிறார்.


Share it if you like it