குடியரசு தின விழாவில் காந்தி போட்டோவை காட்டவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் சொல்ல, பதிலுக்கு அவர்கள் கோட்சேவின் வாரிசுகள் என்று சபாநாயகர் அப்பாவு கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார். அப்போது, குடியரசு தின விழாவுக்கு முதல்வருடன் சென்றிருந்தேன். அங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிய காணொளி திரையிடப்பட்டது. அதில், கோபாலகிருஷ்ண கோகலே, வீர சாவர்க்கர் ஆகியோரது படங்களை மட்டுமே திருப்பித் திருப்பிக் காட்டினார்கள். காந்தியின் போட்டோவை கடைசிவரை காட்டவில்லை என்றார்.
மேலும், காந்தி இல்லாத சுதந்திரமா என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அவர்கள் கோட்சேக்களின் வாரிசுகள் என்று கூறினார். அதற்கு துரைமுருகனோ, இதை நாங்கள் சொல்ல முடியாது. நீங்கள் சொல்லி விட்டீர்கள். அதை நாங்கள் நீக்க முடியாது. அப்படியே இருக்கட்டும் என்று கூறியதோடு, சபையில் சிரிப்பலை நிலவியது. சட்டமன்றத்தைப் பொறுத்தவரை சபாநாயகர் என்பவர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், சபாநாயகர் அப்பாவுவோ அவர்கள் கோட்சேக்களின் வாரிசுகள் என்று ஒரு சார்பாக பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த காணொளி உங்களுக்காக…