Share it if you like it
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டை சிறப்பிக்கும் வகையில் அந்த விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த மேஜர் தயான் சந்த் சிங் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி ‘இந்திய தேசிய விளையாட்டு தினம்’ கொண்டாடப்படுகிறது. கடந்த ந்த 2012 -ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி மட்டுமின்றி மற்ற விளையாட்டு வீரர்களும் இன்றைய தினத்தில் கவுரவிக்கப்படுகின்றனர். மேஜர் தயான் சந்த் சிங், 1928,1932,1936 ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணிக்கு தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it