ஆவடியில் தி.மு.க. நடத்திய ஒரு சம்பவம் எங்களுக்காக சட்டத்தையே வளைப்போம், சாக்கடையை வளைக்க மாட்டோமா என்று பொதுமக்களை கேட்க வைத்திருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட நியூ மிலிட்டரி ரோடு பகுதியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, சாலை ஓரத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த கடைகள், வீடுகள் ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்தி விட்டு கழிவுநீர் கால்வாய் அமைத்து வருகிறார்கள். அதேசமயம், இந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் அதே பகுதியில்தான், இந்திய ராணுவத்துக்குத் தேவையான கனரக போர்க்கள ஊர்திகளை தயாரிக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த திண் ஊர்தி தொழிலக தொ.மு.ச. அலுவலகம் இருக்கிறது. எனவே, இந்த அலுவலகத்தை மட்டும் இடிக்காமல், வளைத்து நெளித்து கழிவுநீர் கால்வாயை அமைத்திருக்கிறார், மேற்கண்ட பணியை ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்ட்டர்.
இதை பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வின் அடாவடியை கண்டித்து வருகின்றனர். கீழ்கண்ட வீடியோவை கிளிக் செய்து தி.மு.க.வின் அராஜகத்தை நீங்களும் பாருங்கள்…