ஆவணி மாத சிறப்பு வழிபாடு – ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா – தடைகளை தகர்க்கும் விநாயகர் வழிபாடு

ஆவணி மாத சிறப்பு வழிபாடு – ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா – தடைகளை தகர்க்கும் விநாயகர் வழிபாடு

Share it if you like it

வேதங்களும் புராணங்களும் நமது ஆன்மீக தர்மங்களும் முழு முதல் கடவுளாக உரைப்பது விநாயக கடவுளை தான். விக்னம் என்றால் தடை என்று பொருள் விநா என்றால் தடைகளை உடைப்பது. அந்த வகையில் தடைகளை அகற்றும் நாயகன் என்ற பெயரில் தான் விக்ன விநாயகர் என்ற பெயர் விநாயகப் பெருமானுக்கு வழங்கலானது. நவகிரகங்களையும் தன்னுள் அடக்கிய நவகிரக நாயகன். நான்கு வேதங்களில் மறைப்பொருளாக வாழ்பவன். வேதங்களின் பரிபூரணமான ஓம் என்னும் பிரணவ பொருளின் மந்திரமாக வாழ்பவன் என்று சனாதன தர்மத்தின் பரிபூரணத்தின் முழு அம்சமான கடவுளாக அருள் பாலிப்பவன் விநாயக கடவுள்.

ஆற்றங்கரை முதல் ஆகாயம் உயரும் மலைக்கோட்டை வரை அனைத்து இடங்களிலும் கோவில் கொண்டு நாடிவரும் அடியவர்களை அரவணைத்து அருள்வதில் விநாயக கடவுளுக்கு நிகர் அவரே. கல்வி ஞானம் வீரம் பக்தி ஒழுக்கம் ஆன்மீகம் என்று மானுட வாழ்வில் மகத்துவம் காக்கும் உன்னதமான அனைத்தையும் விநாயகனின் அருள் ஆசி வழங்கும் . அதனால் தான் சைவம் வைணவம் சக்தி வழிபாடு கௌமாரகம் என்று பல்வேறு வகையிலான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் சனாதனத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமுதற் கடவுளாக இன்றளவும் விளங்குவது விநாயகப் பெருமானே.

ஷ்ருஷ்டி நாயகனாக பூஜிக்கப்படும் விநாயக கடவுள் அவரது வாழ்வில் முழுமையான பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர். ஆனாலும் திருமணத்தடை புத்திர தடை என்று மனிதர்களை நிலைகுலைய செய்யும் தோஷங்களை எல்லாம் நிவர்த்தி செய்து மங்கல வாழ்வை அருளுபவர். மோக்ஷ காரகராக வழிபடப்படும் கேதுவின் நாயகனாக விநாயகரே முன்னிறுத்தப்படுகிறார். அவ்வகையில் விநாயகரை வழிபட்டு அதன் மூலம் கிரகங்களின் தோஷங்களில் இருந்து விடுபட முடியும். குறிப்பாக கேதுவின் பூரண அனுக்கிரகம் பெற முடியும் என்பது புராணங்களின் வழிகாட்டல். அந்த வகையில் வாழ்வில் தடைகள் நீங்கி கீர்த்தி வெற்றி செல்வம் செல்வாக்கு பெற காரிய சித்தி பெற விநாயகர் வழிபாடு இங்கு முன்னிறுத்தப்படுகிறது.

அதனால் தான் வேலைகளை தொடங்கும் போது எளிமையாக பிள்ளையாரை பிடித்து வைத்து வேண்டுதலோடு பணிகளை தொடங்குகிறோம். வெற்றிகரமாக நடந்தேறிய பிறகு நன்றி கூறும் நேர்த்தி கடனாக பிரம்மாண்டமாக பூஜையை செய்து விநாயகருக்கு நன்றி கூறி வழிபடும் வழக்கமும் நம்மில் வந்தது.

அஸ்திவார பூஜையில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து வேலையை துவங்குவதும் வெற்றிகரமாக பணிகளை முடித்து மனை பிரவேசம் செய்யும் போது பிரம்மாண்டமாக கணபதி ஹோமம் செய்து விநாயகரை வழிபடுவதும் இந்த பக்தியின் வெளிப்பாடு தான் . அந்த வகையில் நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் முதலும் முடிவுமாக இருப்பது விநாயகர் வழிபாடும் அவரின் அனுகிரகமும் தான்.

பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் விநாயகர் பெருமான் வழிபட்ட அடையாளமாக பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இங்கு ஏராளம் உண்டு. பல லட்சம் ஆண்டுகள் வரலாறு கொண்ட சனாதன தர்மத்தின் யுக யுகமாக விநாயகப் பெருமான் வழிபட்டதற்கு இங்குள்ள புராணங்களும் இதிகாசங்களும் ஜோதிடம் என்னும் வானியல் சாஸ்திரம் நூல்களும் கண்கண்ட சாட்சியம். இவ்வளவையும் பார்த்த பிறகும் விநாயக கடவுள் வடநாட்டுக் கடவுள் இங்கு விநாயகர் வழிபாடு 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததில்லை என்று பேசுவது எப்பாடுபட்டாவது இந்த மண்ணில் இருந்து சனாதன தர்மத்தையும் அதன் வழிபாட்டு முறைகளையும் சிதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட சதி அன்றி வேறல்ல .

இங்கு வானாளாவி உயர்ந்து நிற்கும் கோவில்களும் அதில் எல்லா கோவில்களும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகர் திருமேனிகளும் அதன் பல்லாண்டு கால வரலாறும் சனாதன விரோதிகளுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சரியம் தான் .இந்த தார்பாரியம் தெரிந்திருந்தால் அதை அவர்கள் மனதார உணர்ந்திருந்தால் நிச்சயம் அவர்கள் சனாதன விரோதிகளாக வாழ முடியாது . ஆனால் பக்தியின் உச்சம் காட்டும் விநாயகப் பெருமானை உணரவும் அவரை வழிபடவும் கொஞ்சமாவது புரிய புண்ணியம் வேண்டும். அது இல்லாதவர்களுக்கு விநாயகர் தேவையற்ற சிலையாக பொது இடங்களில் தொந்தரவு தரும் சிலையாக தான் தெரிவார் .அது அவர்களின் அறிவு ஊனமே.

விநாயகர் கடவுள் வந்தேறி கடவுள் என்று வீதிக்கு வீதி சனாதன விரோதிகள் பிரச்சாரம் செய்து வரும். தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட விநாயகர் கோவில்கள்.

உச்சிப்பிள்ளையார் கோவில்

மலைக்கோட்டை

திருச்சிராப்பள்ளி.

கற்பக விநாயகர் கோவில்

பிள்ளையார்பட்டி

சிவகங்கை மாவட்டம்

உப்பூர் விநாயகர்

உப்பூர் மண்டபம்

ராமேஸ்வரம்.

ஈச்சனாரி பிள்ளையார் கோவில்

ஈச்சனாரி கோவை

தஞ்சை கும்பகோணம் அடுத்த திலதர்ப்பண புரியில் சுயம்பு முகமாக அருள்பாலிக்கும் ஆதி விநாயகர் கோவில் இதைத் தவிர தமிழகத்தின் அருகில் இருக்கும் . பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்ட பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் அமைந்த சித்தி விநாயகர் கோவில் ஜல பிரதிஷ்டையான சுயமாக எழுந்தருளி இருக்கும் விநாயகர் திருமேனி. ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் மலைப்பகுதியில் சாட்சி கணபதி பெயரில் எழுந்தருளி இருக்கும் விநாயகர் வம்பு வழக்குகளில் தீராத தொல்லைகளை அகற்றி வெற்றி நல்கும் நியாயத்தின் பக்கம் சாட்சியம் அருளும் கணபதியாக வழிபடப்படுகிறார்.

வடமாநிலங்களிலும் பாரதத்திற்கு வெளியே பல்வேறு நாடுகளிலும் பல ஆயிரம் ஆண்டுகள் முந்தைய விநாயகர் கோவில்கள் இன்றளவும் உண்டு. நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த விநாயகர் திருமேனிகளும் இந்தோனேசியா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அகழ்வாய்வு பணியின் போது வெளிப்படுகிறது. உலகம் முழுவதும் சனாதனம் பரவி இருந்ததும் சனாதனத்தின் முழு முதல் கடவுளாக விநாயக பெருமான் இருந்ததற்குமான கண்கண்ட சாட்சியங்கள். இவ்வளவையும் கண்டபிறகு சனாதன தர்மத்தை பழிப்பவர்களும் விநாயகப் பெருமானை வந்தேறி கடவுள் என்பவர்களும் கண்ணிருந்தும் குருடர்களே.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு தோஷங்களை நிவர்த்தியாக்கும். குறிப்பாக கேது அனுகிரகம் பெற்றுத்தரும். செம்பருத்தி அரளி பூக்கள் வெற்றிலை பாக்கு மஞ்சள் பழம் கொண்டு விநாயகரை பூஜிப்பது நல்ல பலனை தரும்.

அவல்பொரி பொரிகடலை வெல்லம் அதிரசம் எள்ளுருண்டை தளிகை சுண்டல் வகை கொழுக்கட்டை பாயாசம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பண்டங்கள் பிள்ளையாருக்கு நைவேத்தியமாக படையல் வைப்பது சிறப்பு . இயலாத நிலையில் ஒரு குவளைப்பானகம் பால் திரட்டு பழங்கள் என்று நம்மால் ஆன சிறு அர்ப்பணத்திலும் விநாயகரின் பூஜையை திவ்யமாக நிறைவேற்ற முடியும் . அவரின் பூரண ஆசியை உள்ளன்போடு வணங்கி பரிபூரணமாக பெறவும் முடியும் .

விநாயகர் ஜெயந்தி நடைபெற்றதாக புராணங்கள் குறிப்பிடும் ஆவணி மாதம் அமாவாசை அடுத்து வரும் வளர்பிறை சதுர்த்தி நாளின் விநாயகப் பெருமானை வழிபட்டு அதன் மூலம் வெற்றியும் காரிய சித்தி பெறுவோம்.

ஐந்து கரத்தனை

ஆனை முகத்தனை

இந்தின் இளம் பிறை

போலும் எயிற்றனை

நந்நி மகன் தனை

ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்து

அடி போற்றுகின்றேனே!

ஓம் மஹா கணபதி நமஹ


Share it if you like it