கொரோனா தாக்கம், பணிக்கு ஆட்கள் கிடைக்காமை, மற்றும் உற்பத்தி செய்த தானியங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்தி தராமை என பல இன்னல்களை தமிழக விவசாயிகள் இன்று வரை அனுபவித்து வரும் இந்நிலையில் விவசாயிகளின் தலையில் மிகப்பெரிய இடியை அண்மையில் கேரள அரசு இறக்கியுள்ளது.
எவ்வித முன் அறிவிப்புமின்றி தமிழக அதிகாரிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், முல்லை பெரியாறு அணையை கேரள அரசு திறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக விவசாயிகளின் பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்ளும் விவசாய சங்கங்கள், போலி விவசாயி அய்யாக்கண்ணு, போன்றவர்கள் கேரள அரசு எடுத்த முடிவுக்கு எதிராக இன்று வரை வாய் திறக்காமல் கள்ள மெளனம் காப்பது ஏன்? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நக்கல், நையாண்டி, பேச்சுக்கு சொந்தக்காரரும் தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமா துரைமுருகன் கூட கேரள அரசின் அடாவடி தனத்தை கண்டிக்காமல் மெளனம் காப்பது மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.