அய்யப்ப பக்தர்கள், இருமுடி கட்டி  விமானத்தில் சென்று  அய்யப்பனை தரிசிக்கலாம்  !

அய்யப்ப பக்தர்கள், இருமுடி கட்டி விமானத்தில் சென்று அய்யப்பனை தரிசிக்கலாம் !

Share it if you like it

அய்யப்ப பக்தர்கள், இருமுடி கட்டி விமானத்தில் செல்வதில் பிரச்னை உள்ளது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, முழு தேங்காயை விமானத்தில் கொண்டு செல்ல தடை உள்ளது. கடந்த ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையம், நாடு முழுதிலும் இருந்து, கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும், அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம் சபரிமலைக்கு விமானங்கள் மூலம் செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டி செல்லும் போது, இரண்டு நெய் தேங்காய்கள், இருமுடிக்குள் வைத்து எடுத்து செல்ல, இந்திய விமான நிலைய ஆணையம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு அய்யப்ப பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அய்யப்ப பக்தர்கள், இனி விமானத்தில் கொச்சி சென்று அங்கிருந்து சபரிமலை செல்லலாம். இதனால் சென்னையில் இருந்து கொச்சிக்கு, விமானங்களில் செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Share it if you like it