16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை !

16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை !

Share it if you like it

போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகள் போன்ற இலக்கில் வெற்றி பெற, படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்கள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சியை துவங்கி விடுகின்றனர்.

இதனால், தங்களின் பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல், பயிற்சியிலும் கவனம் செலுத்த முடியாமல் திணறுவதுடன், தேர்வுகள் குறித்த பயம் தொற்றிவிடுகிறது. இதனால் மாணவர்கள் விபரீதமான முடிவுகளும் சில நேரங்களில் எடுத்து விடுகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த கோச்சிங் சென்டர்களை சீர்படுத்தி கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம், இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பட்டப்படிப்பைக் காட்டிலும் குறைவான தகுதியைக் கொண்ட ஆசிரியர்களை கோச்சிங் சென்டரில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்த பின்னரே, 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.


Share it if you like it