மதம் என பிரிந்தது போதும் – CAA-விற்கு எதிர்ப்பு தெரிவித்த போராளிகள் எல்லாம் கப்சிப்..!

மதம் என பிரிந்தது போதும் – CAA-விற்கு எதிர்ப்பு தெரிவித்த போராளிகள் எல்லாம் கப்சிப்..!

Share it if you like it

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான், என்று இந்தியாவை ஒட்டியுள்ள இஸ்லாமிய நாடுகளில் இருந்து, ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், என சிறுபான்மை மக்களுக்கு இந்தியா குடியுரிமையை வழங்கும் என்று புதிய சட்டத் திருத்தச் சமோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இச்சட்டத்தால் எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு முதல் பல சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் முதல் பலர் தங்களின் கருத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆனால் தி.மு.க, தி.க, வி.சி.க, இஸ்லாமிய அமைப்புகள், கிறிஸ்தவ மிஷநரிகள், உட்பட பலர் மத்திய அரசின் மீது மக்களுக்கு கோவம் ஏற்படும் வகையில் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வந்தனர். மேலும் போலி அரசியல்வாதிகள், நடிகர்கள், என பலரின் பொய்யான பேச்சை நம்பி அப்பாவி ஹிந்துக்கள் கூட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள், என்பது பொய் இது உண்மைக்கு புறம்பான செயல். இந்த சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு, எவ்விதத்திலும் பாதிப்பு இல்லை என்பதை தமிழக மக்கள் மெல்ல மெல்ல தற்பொழுது உணர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கான் மற்றும் பங்களாதேஷில் சிறுபான்மை மக்கள் மீது நிகழ்ந்து வரும் கொடுமைகள் குறித்து இன்று வரை நடிகர் சூர்யா, வைகோ, சீமான், சுந்தரவள்ளி, அருணன், திருமா, ஸ்டாலின் உட்பட பலர் இது வரை பங்களாதேஷ் ஹிந்துக்கள் மீது நிகழும் கொடுமைகள் குறித்து வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராளிகள் ஹிந்துகள் மீது தானே தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகிறது நமக்கு என்ன என்பது போல் இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it