வேலை தேடி சென்னை வர முயன்ற சட்ட விரோத பங்களாதேஷிகள் அதிரடி கைது..!

வேலை தேடி சென்னை வர முயன்ற சட்ட விரோத பங்களாதேஷிகள் அதிரடி கைது..!

Share it if you like it

நாட்டு மக்களின் நலனை கருதி குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாட்டிற்கு இது எவ்வளவு மிக முக்கியமான சட்டம் என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

சென்னை நோக்கி வந்த சட்டவிரோத பங்களாதேஷ் நாட்டவர்களை சேர்ந்த 10 பேர் அதிரடி கைது.. 

சட்டவிரோதமாக அசாமில் நுழைந்த 10 பங்களாதேஷிகள் கைது 4 பெண்கள், 6 ஆண்கள்  இவர்களுக்கு சென்னை ஹோட்டல்களில்  வேலை கிடைத்துள்ளது. இவர்கள் அசாமின் பதர்பூரில் இருந்து சென்னைக்கு ரயில் ஏற திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் தென்னிந்தியாவில் வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

  1. வேலை உறுதி என்று தெரியாமல், யாரும் தேசம் விட்டு தேசம் வர மாட்டார்கள். அப்படி என்றால் இவர்களுக்கு வேலை அளித்த ஓட்டல்கள் எது?
  2. முதலில் சென்னை போவோம், பிறகு வேலை தேடுவோம் என்று யாரும் நினைக்கமாட்டார்கள்.   இது ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வருவது போல அல்ல. இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க, வேலை ஏற்பாடு செய்பவர்கள் யார்?

3. ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு தென்னிந்தியா முழுவதும் வேலை செய்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. 
இது நாட்டின் பாதுகாப்புக்கே கேள்விக் குறி.

4. திருப்பூரில் பல சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறிகள் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த மக்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் நுழைவதால், நம் நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளூர் மக்கள் பலரும் வேலையின்றி தவிக்கிறார்கள்.

ஆந்திரா, கேரளா, பீஹாரி, இங்கு வரக்கூடாது என சொல்லும் தமிழக போராளிகள் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் இங்கு வந்தால் மட்டும் வாயை மூடி கொள்வது ஏன்? என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it