இந்திய வரைபடத்துடன் வங்கதேச நபர் கைது: குண்டுவெடிப்பு சதியா? போலீஸ் விசாரணை!

இந்திய வரைபடத்துடன் வங்கதேச நபர் கைது: குண்டுவெடிப்பு சதியா? போலீஸ் விசாரணை!

Share it if you like it

வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டத்திற்குள் சுற்றித் திரிந்த வங்கதேச நபர் காலமூசாவை போலீஸார் இந்திய வரைபடத்துடன் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதற்காக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது, கோயில் சுற்றுவட்டாரப் பகுதியில் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நபர் சுற்றி திரிவதை போலீஸார் கண்டனர்.

இதையடுத்து, அந்த நபரை அழைத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அந்த நபர் வங்கதேசத்தைச் சேர்ந்த காலிமூசா என்பது தெரியவந்தது. பின்னர், அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனையிட்ட போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி. காரணம், இந்திய வரைபடத்துடன் கூடிய காகிதம் ஒன்றும் பைக்குள் இருந்தது. மேலும், காலிமூசா முறையான அனுமதி பெறாமல் கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் காலிமூசாவை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலிமூசா திருவிழா கூட்டத்திற்குள் எதற்காக நுழைந்தார்? குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட முயன்றாரா? இவருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? திருப்பரங்குன்றம் பகுதிக்கு வர என்ன காரணம்.? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it