ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை: நெதர்லாந்து எம்.பி. சரமாரி கேள்வி!

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை: நெதர்லாந்து எம்.பி. சரமாரி கேள்வி!

Share it if you like it

பங்களாதேஷில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை குறித்து நெதர்லாந்து எம்.பி. சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, கடந்த மே மாதம் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த தஸ்லிம் அகமது ரெஹ்மானி என்பவன், சிவலிங்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசினான். இதை நுபுர் ஷர்மா பலமுறை கண்டித்தும் கேட்காமல், தொடர்ந்து இழிவுபடுத்திக் கொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த நுபுர் ஷர்மா இஸ்லாமிய மதப் புத்தகத்தில் முகமது நபி பற்றி இடம்பெற்றிருக்கும் ஒரு கருத்தை சுட்டிக் காட்டினார். ஆனால், ஆல்ட் நியூஸ் என்னும் செய்தி நிறுவனத்தின் இணை இயக்குனர் முகமது சுபைர் என்பவன், ரெஹ்மானி பேசியதை நீக்கி விட்டு, நுபுர் ஷர்மா பேசியதில் முகமது நபி பற்றி கூறியதை மட்டும் எடிட் செய்து, சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினான். மேலும், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களையும் டேக் செய்து, உருது மொழியில் டிரான்ஸ்லேட் செய்தும் வெளியிட்டான். எனவே, இந்த விவகாரம் இந்தயா மட்டுமல்லாது சர்வதேச அளவில் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து, நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனினும், நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி, இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தரப்பிலிருந்து நுபுர் ஷர்மாவுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. அதேசமயம், ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக இருந்தன. குறிப்பாக, நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஏராளமான ஹிந்துக்கள் சமூக வலைத்தளங்களில், வீடியோ பதிவுகளையும் வெளியிட்டனர். அவ்வாறு வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்ஹையா லால், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் கோஹ்லே ஆகியோரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்தனர்.

இதனிடையே, பங்களாதேஷைச் சேர்ந்த ஹிந்து ஒருவர், சமீபத்தில் இஸ்லாம் மதத்தை புண்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஆகவே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை பங்களாதேஷின் நரைல் மாவட்டத்திலுள்ள சஹாபரா கிராமத்தில் ஏராளமான ஹிந்துக்களின் வீடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சூறையாடியதோடு, பல வீடுகளை தீவைத்தும் கொளுத்தி இருக்கிறார்கள். மேலும், அங்குள்ள ஹிந்து கோவில்களையும், ஹிந்துக்களின் கடைகள், வணிக நிறுவனங்களையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், நெதர்லாந்து நாட்டின் எம்.பி. கீர்ட் வில்டர்ஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு பல்வேறு கேள்விகள் எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து கீர்ட் வில்டர்ஸ் நெதர்லாந்து வெளியுறவு, நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், “வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான வன்முறை தாக்குதல்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இத்தாக்குதல்கள் முஸ்லீம்களால் நடத்தப்பட்டவை என்பது உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், வழிபாட்டு தலங்கள், கடைகள் தீயிட்டு கொளுத்தப்படுவது உங்களுக்குத் தெரியுமா? பங்களாதேஷில் பெரும்பான்மையினரான முஸ்லீம்கள், சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? இத்தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அடிக்கடி ஊடகங்களில் பரவலாக பதிவாகும் அதேவேளையில், இஸ்லாமியர்களால் ஏற்படும் வன்முறைகள் பெரும்பாலும் துடைத்தெறியப்படுகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? அப்படியென்றால், இதற்கான விளக்கம் உங்களிடம் உள்ளதா? இல்லை என்றால், ஏன் இல்லை? நுபுர் ஷர்மா துணிச்சலாக முகமது பற்றிய உண்மைகளை கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாதத்தில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? உண்மையை பேசியதற்காக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்கிற எனது கருத்தை நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்களா?

நுபுர் ஷர்மாவுக்கு உங்கள் ஆதரவை இந்திய அரசாங்கத்திடம் தெரிவிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இல்லையென்றால், ஏன் கூடாது? சமூக ஊடகங்களில் நுபுர் ஷர்மாவை ஆதரித்த ஒரு ஹிந்து டெய்லரை 2 முஸ்லிம்கள் தலை துண்டித்து கொலை செய்தது உங்களுக்குத் தெரியுமா? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து எனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்தது உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? சந்தேக நபர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்படுமா? இதற்கு என்ன சர்வதேச நடவடிக்கைகளை எடுப்பீர்கள்? பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் உள்ள ஹிந்துக்களை வெளிப்படையாக ஆதரிக்கவும், பங்களாதேஷ் மற்றும் இந்திய அரசாங்கங்களை தொடர்பு கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன் இல்லை? ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களின் வன்முறையை வெளிப்படையாக கண்டிக்கத் தயாரா? இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளின் அரசாங்கங்களிடமும் தங்கள் நாடுகளில் உள்ள ஹிந்துக்களின் சிறந்த பாதுகாப்புக்காக வாதிட நீங்கள் தயாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இவ்வாறு நெதர்லாந்து எம்.பி. கிரீட் வில்டர்ஸ் கேள்வி எழுப்பி இருப்பது, இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் முழுவதிலும் இருக்கும் ஹிந்துக்கள், ஹிந்து அமைப்புகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Share it if you like it